LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை :

1. வறுத்த வேர்க்கடலை - 1 1/2 கப்

2. கடலை மாவு - அரை கப்

3. அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்

4. பூண்டு - 5 பற்கள்

5. வரமிளகாய் - 5

6. மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

7. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

8. கறிவேப்பிலை - சிறிது

9. உப்பு - 1 டீஸ்பூன்

10. தண்ணீர் - தேவையான அளவு

11. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

2. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

3. பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

4. கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா ரெடி!!

by Swathi   on 27 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.