LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

கழனியெங்கும் மண் நிறைத்து
விலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும் விற்றுப் போச்சே; விளங்கலையா..?

செந்நெல் போட்ட மண்ணில்
மாடி வீடுகளை விதைத்தோமே; இன்று
மாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..?

காடுகளை அழித்த மண்ணில்
வீடென்கிறோம்; கோவிலென்றோம்;
உள்ளே சாமியில்லையே.., புரியலையா ?

மரங்களை வெட்டி வெட்டி – மனிதர்களை
அறுக்கத் துணிந்தோம், விளம்பரத்தை நம்பி
நடிப்பதை வழ்வாக்கினோமே, அசிங்கமில்லையா ?

உறவுகளுக்குள் பேசவே துணிவில்லை
உயிரறும்போது கேட்க வீரமுமில்லை
பயத்தில் செத்து செத்து பிழைக்கிறோமே, உயிர்பிச்சை உறுத்தலையா ?

எண்ணெய்க் கப்பல் கடலில் கவிழ்வதும்
எந்தாய் நிலத்தை எவனோ ஆள்வதும்
புடைத்தெழும் நரம்பை புலியேகீறும் வலியில்லையா ?

வெள்ளி வானம் மெல்ல உடைவதும்
மழையும் காற்றும் விலையாய் ஆனதும்
மழலையைர் உறுப்பை மர்மமாய் விற்பதும்
வாழ்தலின் அசிங்கமடா..,

இலையில் மறைத்தாய், துணியில் மறைத்தாய்
சாதியைப் பூசினாய், மதத்தை தடவினாய்
இனி மானத்தை எதைக் கொண்டு மறைப்பாய் ?

நீருக்கு அணைக் கட்டுவதும்
சோற்றிற்கு வரி போடுவதுமாய்
சொந்தமண்ணில் சோடையாகி நிற்கிறோமே (?)

காலில் விழுவதும்
கனவில் மிதப்பதும்
இலவசத்திற்கு மயங்கி எலியை புலியாக ஏற்கிறோமே (?)

படிப்பை விற்றதும்
மருந்தில் வியாதிகள் பிறந்ததும்
அரசியல் குப்பையானதும், எவரின் அறிவீனம் ? யாருடைய பலவீனம்?

விவசாயி உயிர் கொடுப்பதும்
நெசவாளி நாண்டுச் சாவதும்
பசிமூடிய அடுப்புகளெங்கும் இதயம் எரிவதும் யானை கட்டிப் போராடித்த எம் மன்னன் சோழனுக்கே இழுக்கில்லையா???

எப்படியோ இறந்தவர் இறந்தனர்
அறுபட்டக் கயிற்றிலும் தொங்கி முடிந்தனர்
அம்மணமாய்க் கூட திரிந்தனர்,

இனி மீத்தேன் கூட மூச்சுவிடும்..
அணுமின் நிலையங்கள் உயிரை அசைபோடும்..
நாற்காலிகள் இலவச நஞ்சுமிழும்..
மறுப்பதற்கில்லை -
வீட்டிற்கு இத்தனைப் பேர் இறந்துவிட்டார்களென அதற்கும் அரசு பாய்ந்துவந்து நம் மீதே வரியையும் ஏய்க்கலாம்,

அதனாலென்ன (?)!!

இதோ மீதமிருக்கும் பொழுதுகள் உன்னுடையவை
வா.. மீண்டும் நம் வாழ்வை
அங்கிருந்தே துவங்குவோம்; காடுகளிலிருந்து!!
--------------------------------------------------
வித்யாசாகர்

by Swathi   on 14 Dec 2017  2 Comments
Tags: Vetkam   Vetkam Kavithai   Pennin Vetkam Kavithai   Veeru   வெட்கம்   வீறு   எழு  
 தொடர்புடையவை-Related Articles
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
கருத்துகள்
29-Dec-2017 21:52:26 வித்யாசாகர் said : Report Abuse
நன்றிங்கம்மா. வாழ்க..
 
29-Dec-2017 14:38:31 samundeeswari said : Report Abuse
சூப்பர் கவிதை ,மிக நன்றாக உள்ளது ,மிக்க நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.