LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்!

மக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது வெட்டிவேர் செருப்பு. கடந்த வாரம், விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப்பட்ட செருப்பின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தோம். அதனைப் பார்த்த வாசகர்களில் பலர், அதீத ஆர்வத்துடன் அதுகுறித்த விவரங்களை கேட்க துவங்கினர். இதனை அந்த வெட்டிவேர் செருப்பு தயாரிக்கும் ஆனந்திடம் தெரிவிக்க மகிழ்ச்சியில் அதுபற்றி விரிவாக கூறத் தொடங்கினார்.

"பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது வெட்டிவேர். குருவேர், உசிர், வீராணம் என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. வெட்டிவேரானது அனைத்துவகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு கோரைப்புல் போன்ற தோற்றத்தினை கொண்டிருக்கும். இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளமாக வளரும் தன்மை கொண்டது. இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் நடலாம். இதன் வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமநோய்களுக்கு தீர்வாகவும், பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. இந்த வெட்டிவேரானது பல வழிகளில் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்காக 'இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்' மூலம் வெட்டிவேரை மதிப்புகூட்டி பொருள்களாக விற்பனை செய்து வருகிறேன் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த்.

"வெட்டிவேரில் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். அதை பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பல பொருட்கள் தயாரிக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றும் தன்மையும் இந்த வெட்டிவேருக்கு உண்டு. விவசாயத்தைப் பொறுத்தவரை மண் அரிப்பைத் தடுப்பதோடு, நிலத்திலுள்ள விஷத்தன்மையை முறிக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. வெட்டிவேரில் செருப்பு தயாரிக்கும்போது வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் கைத்தறி மூலம் நெசவு செய்யும்போது தினசரி 3 மீ அளவுக்கே வெட்டிவேரை நெய்ய முடியும். இதில் முதலில் வெட்டிவேரை வாங்கிக்கொண்டு இருக்கும்போது உயரத்துக்கு ஏற்ப பிரிக்க வேண்டும். இதனை நெசவு செய்ய மூன்று நபர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கொடுத்து வெட்டிவேர் செருப்பினை தயார்செய்து சரியாக 400 ரூபாய் என்ற அளவில் கொடுக்கிறோம். மேலும் இந்த செருப்பானது, உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதனை பெண்கள் மணத்துக்காக தலையிலும் அணிவதுண்டு.

சாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்தவித்தியாசமும் இல்லை. கடலூரில் வெட்டிவேர் அதிகம் கிடைக்கிறது. இதனை வாங்கி அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். பொதுவா இந்த செருப்பை உபயோகப்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தற்போது வெட்டிவேர் செருப்பு உட்பட 60-க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழ்நாடு முழுவதும் வழங்கிக்கொண்டிருக்கிறோம். வெட்டிவேரானது கோவில் கும்பாபிஷேகங்களில் தீர்த்தம் தெளிக்க பயன்படுத்தும் நீரில் ஊறவைத்து பக்தர்கள்மீது தெளிக்கிறார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக இந்த வெட்டிவேர் பயன்படுகிறது. 'இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்' சார்பில் அதிகாரபூர்வமாக தொடக்க விழா வரும் 4-ம் தேதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நேரில் கலந்துகொள்ளலாம்" என்றார்.

தொடர்புக்கு:

ஆனந்த் - 98439 51618.

 

குறிப்பு: விளம்பரமல்ல, உறுதிசெய்த தகவலும் அல்ல. வாசகர்கள் ஆய்வுசெய்து பயன்படுத்தவும். 

by Swathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.