நடிகர் விஜய் சிம்புதேவன் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஜயை, அட்லி , கலைப்புலி தாணு ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி விஜய்யின் 59வது படத்தை அட்லி இயக்கப்போவதை உறுதி செய்துள்ளன.
இந்த புதிய படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனேகமாக இப்படம் 2016 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
|