LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்கில் விஜய்!!

இயக்குநர் செல்வபாரதி எம்ஜிஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.


1965 ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். இப்படத்தை சாணக்யா இயக்கியிருந்தார்.


விஜயா கம்பைன்ஸ் 'எங்க வீட்டுப் பிள்ளை' ரீமேக்கை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இது பற்றி விஜய் கூறுகையில் இப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது என்று கூறினார்.


இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய்யை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்!
அமரர் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளாராம். விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. சீமான் கட்சியில் பிஸியாக இருந்த அவர், மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டரானது. எம்ஜிஆர் படங்களில் ஆக்ஷன் க்ளாஸிக் என்றால் அது இந்தப் படம்தான்.
இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். சாணக்யா இயக்கியிருந்தார். இப்படத்தினை ரீமேக் பல நடிகர்கள் முயன்றும் முடியாமல் போனது.
ஆனால் விஜய்யை வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாராம் செல்வபாரதி. இவர் ஏற்கெனவே வசீகராவில் விஜய்யை எம்ஜிஆர் ரசிகராகத்தான் காட்டியிருப்பார். இப்போது எம்ஜிஆர் வேடத்திலேயே விஜய்யை நடிக்க வைக்கப் போகிறார்
இந்த விஷயத்தை விஜய்க்கு அவர் சொன்னதும், மிக மகிழ்ந்த விஜய், கொஞ்சம் பொறுத்திருங்க என்று கூறியிருக்கிறாராம். அஜீத்தை வைத்து வீரம் பண்ண விஜயா கம்பைன்ஸ், இந்தப் படத்தை விஜய்யை வைத்துத் தயாரிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் பக்தர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..!

 

by Swathi   on 19 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.