கொம்பன் படத்திற்கு பிறகு படிப்பிற்காக, நடிப்புக்கு கொஞ்சம் லீவு விட்ட லட்சுமி மேனன், அஜீத் நடித்த வேதாளம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் மிருதன், அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி தனது மார்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிகின்றன.
ஆக.... சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் லட்சுமி மேனனுக்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
|