தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய், அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்க. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார் என்பதும் ஏற்கெனவே முடிவான விஷயம்.
தற்போதைய லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய் கூட நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படியிருக்கும் பட்சத்தில் இது விஜய், ராதிகா சரத்குமார் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
|