LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இதுவரை பள்ளிக் கல்வியில் சொல்லாத விஷயங்களை சொல்லும் - சிகண்டி !!

தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட படம் “ என்னமோ நடக்குது”  விஜய்வசந்த், மகிமா, பிரபு சரண்யா  என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த  இந்த படம் அமோக வெற்றி பெற்றது. ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார். 

இதை தொடர்ந்து விஜய்வசந்த் நடிக்கும் படம் “ சிகண்டி “


நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் நடிக்க சூரியிடம் பேசிக் கொண்டிருகிறோம்.

அழுத்தமான – வேறுபட்ட கதாப்பாத்திரம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்க உளார். அதற்கான பேச்சு வார்த்தையில் உள்ளனர்.


இந்தப் படம் எப்படி என்று இயக்குனர் ராஜபாண்டியிடம் கேட்டோம்...


பள்ளிக் கல்வி சம்மந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. மேலும் வரலாம். அவர்கள் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது.

அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட  ஆறு மாதகாலம்  சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள் – சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து உள்ளோம்..பல நல்ல தகவல்களை திரட்டி உள்ளோம்.அதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்.


ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம் - குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த சிகண்டியில் வெளிப்படும்.

படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் எதோ ஒரு சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாக உள்ளது. “ என்னமோ நடக்குது” படத்தை போலவே “ சிகண்டி “ படத்தையும் அதிக பொருட்செலவில் டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார் என்றார். 

by Swathi   on 28 Nov 2014  0 Comments
Tags: Vijay Vasanth   Nikisha Patel   Sigandi Movie   Sigandi Tamil Movie   சிகண்டி   என்னமோ நடக்குது   விஜய்வசந்த்  
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை பள்ளிக் கல்வியில் சொல்லாத விஷயங்களை சொல்லும் - சிகண்டி !! இதுவரை பள்ளிக் கல்வியில் சொல்லாத விஷயங்களை சொல்லும் - சிகண்டி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.