LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஒட்டக் கூத்தர் நூல்கள்

விக்கிரமசோழன் உலா - மூவருலா-1

 

நூல்
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த 1
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் 3
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் 6
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் 7
தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்
சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் 9
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் 10
காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து
தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் 11
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்
தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் 12
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட 15
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் 16
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் 17
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை 19
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20
பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல 21
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23
சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்
சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் 24
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
டடல்கொண்ட மாராட் ரானை - உடலை 25
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் 
ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் 27
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை 29
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்
கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் 30
இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு 31
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் 32
மேய் திகிரி விரிமே கலையல்குற்
றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் 36
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல்
தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் 38
கண்ணு முலையும் பெரிய களியன்னம்
எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்
எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40
பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் 42
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43
அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்
தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன
மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் 44
சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே
தாழு மகரக் குழைதயங்க - வாழும் 45
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற்
சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் 46
தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே
மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் 47
முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய 49
அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து
வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் 51
பட்டத்து யானை
கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று
காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் 52
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்
வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் 53
கணியு மருப்பு மடற்கையு மின்மை
தணியும் யமராச தண்டம் - தணியாப் 54
பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற்
கரிய தொருதானே யாகிக் - கரிய 55
மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும்
கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56
ஊறு மதந்தனதே யாக வுலகத்து
வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் 57
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58
கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன்
முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் 60
துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி
அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61
அளித்தன னெங்கோமா னாதலா லின்று
களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்
ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் 63
கருத்து மயிரா பதநின் றதனை
இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க 64
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக்
கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65
வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக்
கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் 67
உடன் வருவோர்
தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை
மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் 68
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்
பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் 70
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக்
கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்
கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் 72
முனியும் பொழுது முரிபுருவத் தோடு
குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்
வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74
மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக்
கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் 75
புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க
ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் 76
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் 79
செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் 80
கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில்
விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81
வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும்
பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் 82
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும்
மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் 83
காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த
சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து 84
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85
மான வரச ரிரிய வடகலிங்கத்
தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86
கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்
வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் 87
கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த
செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து 88
வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்
வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89
என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்
முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் 90
குழாங்கள்
சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்
வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91
சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த
பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் 92
பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை
புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா 93
ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்
சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94
கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும்
கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் 95
திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும்
வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96
இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச்
சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி 97
உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப்
பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98
இணங்கு மமுத கலசங்க ளேந்தி
வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99
பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய்
கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100
வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி
உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101
வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்
பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் 102
மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில்
விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் 103
கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்
மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104
வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு
வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105
உருவி னொளியி னுணர்வி னுரையிற்
பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106
குழாங்களின் கூற்று
சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த
பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107
செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ
வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108
ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்
வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109
எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார்
கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் 110
ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை
பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111
கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்
செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112
பேதை
வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் 113
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய
கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்
பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு 116
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் 117
பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை
நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118
கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் 119
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் 120
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் 121
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122
படியின் மதியும் பகலவனுந் தோற்கும்
முடியி லொருகாலு மூளா - வடிவில் 123
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124
சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா
விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் 125
உலகம் பரவுந் திருப்புருவத் தோரா
திலக முகாம்புயத்துச் சேரா - பலவும் 126
திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா
இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் 127
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் 128
கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும்
நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித்
தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே 130
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை 131
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத்
தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132
மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும்
ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர 133
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134

நூல்

சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த 1
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் 3
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் 6
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் 7
தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் 9
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் 10
காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்துதூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் 11
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் 12
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்றுபுண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட 15
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் 16
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் 17
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டுசிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணிசெற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை 19
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20
பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல 21
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்ததுங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23
சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் 24
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்டடல்கொண்ட மாராட் ரானை - உடலை 25
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லைமறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் 27
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பைமூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை 29
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் 30
இணைத்தார் மகுட மிறக்கி யரசர்துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு 31
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் 32
மேய் திகிரி விரிமே கலையல்குற்றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33
ஓது முலகங்க ளேழுங் தனித்துடையகோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டுதென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் 36
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல்தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் 38
கண்ணு முலையும் பெரிய களியன்னம்எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40
பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக்கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப்பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் 42
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரைமுக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43

அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்

தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையனமானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் 44
சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனேதாழு மகரக் குழைதயங்க - வாழும் 45
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற்சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் 46
தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனேமணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் 47
முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்தவயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனேமருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய 49
அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்துவண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகுதாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் 51

பட்டத்து யானை

கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்றுகாலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் 52
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் 53
கணியு மருப்பு மடற்கையு மின்மைதணியும் யமராச தண்டம் - தணியாப் 54
பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற்கரிய தொருதானே யாகிக் - கரிய 55
மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும்கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56
ஊறு மதந்தனதே யாக வுலகத்துவேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் 57
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58
கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன்முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் 60
துவற்று மதுரச் சுவடிபிடித் தோடிஅவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61
அளித்தன னெங்கோமா னாதலா லின்றுகளித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் 63
கருத்து மயிரா பதநின் றதனைஇருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க 64
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக்கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65
வலம்புரி யூத வளைக்குல மார்ப்பசிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக்கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் 67

உடன் வருவோர்

தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகைமன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் 68
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணிமலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் 70
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக்கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் 72
முனியும் பொழுது முரிபுருவத் தோடுகுனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74
மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக்கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் 75
புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்கஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் 76
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்கவாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் 79
செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் 80
கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில்விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81
வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும்பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் 82
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும்மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் 83
காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்தசேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து 84
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85
மான வரச ரிரிய வடகலிங்கத்தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86
கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் 87
கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்தசெங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து 88
வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89
என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் 90

குழாங்கள்

சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91
சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்தபூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் 92
பரக்குங் கலையல்குற் பாவையரே யாணைபுரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா 93
ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94
கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும்கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் 95
திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும்வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96
இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச்சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி 97
உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப்பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98
இணங்கு மமுத கலசங்க ளேந்திவணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99
பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய்கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100
வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கிஉரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101
வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் 102
மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில்விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் 103
கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104
வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகுவீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105
உருவி னொளியி னுணர்வி னுரையிற்பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106

குழாங்களின் கூற்று

சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்தபாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107
செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோவைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108
ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109
எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார்கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் 110
ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகைபாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111
கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112

பேதை

வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் 113
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணியகிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு 116
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் 117
பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகைநன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118
கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகைகற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் 119
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் 120
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் 121
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுதுதாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122
படியின் மதியும் பகலவனுந் தோற்கும்முடியி லொருகாலு மூளா - வடிவில் 123
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124
சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடாவிரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் 125
உலகம் பரவுந் திருப்புருவத் தோராதிலக முகாம்புயத்துச் சேரா - பலவும் 126
திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லாஇசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் 127
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறாமெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் 128
கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும்நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித்தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே 130
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமேதிருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை 131
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத்தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132
மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும்ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர 133
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.