LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

விரைசேர் பொன்மலரே - திருவருட்பா

பாடல் : விரைசேர் பொன்மலரே   (திருவருட்பா)

ராகம் : தில்லானா

தாளம் : ஆதி திஸ்ரம்

இயற்றியவர் : வள்ளலார்

பாடுபவர் : அஞ்சனாதேவி

இசை குரு : திருபுவனம் குரு.ஆத்மநாதன்

Semi-classical

 

இந்த காணொளியில் இரண்டாவது பாடல்: 4:30 நிமிடத்திலிருந்து பார்க்கவும் ... 

 

ஆறாம் திருமுறை / ஆரமுதப் பேறு

    அஃதாவது, திருவருள் ஞானமாகிய பெறற்கரிய அமுதத்தைத் தாம் பெற்றமைக்கு, மகிழ்ச்சி மிகுந்து சிவனை வணங்கித் துதித்துப் பாடுவதாகும். பண் : நட்டராகம்

கலிவிருத்தம்

 

 விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே 
 கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே 
 பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய் 
 அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. 

 

 

 

உரை:

     மணம் கமழும் பொன்மலர் போன்றவனே! அதன்கண் ஊறுகின்ற செவ்விய தேனாகியவனே! நீர்க்கரையில் நிற்கும் மா, பலா, வாழை ஆகிய மூவகை மரத்துக் கனி போல்பவனே! அக்கனியின்கண் சுவைக்கப்படும் இனிமையின் விளைவாகியவனே! சிவசத்தியின் உள்ளே ஒளிரும் அருளொளியே! பெரும்பற்றப் புலியூர்க் கண்ணுள்ள அம்பலத்தாடும் அருளரசே! எனக்கு நினது திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தைத் தந்தருளினாய்! நினக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     பொன்னாலாகிய மலர் சிவமணம் கமழ்வது போலச் சிவன் திருமேனி விளங்குதலால், “விரைசேர் பொன் மலரே” என்று விளம்புகிறார்; நீர்நிலைகளில் கரைமேல் நிற்கும் மாவும் பலாவும் வாழையுமாகிய மூவகை மரங்களையும் நினைவுறுத்தற்கு, “கரைசேர் முக்கனியே” என்று கூறுகின்றார். ஒளி யுருவாகிய சத்தியிடமாகச் சிவம் நிற்கும் உண்மை புலப்பட, “பரைசேர் உள்ளொளியே” என்று பகர்கின்றார். பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருச்சிற்றம்பலம், “பெரும் பற்றம்பலம்” என வந்தது. அருளாரமுதம் - திருவருள் ஞானமாகிய அமுதம். பெறலருமை பற்றி இஃது ஆரமுதம் எனப்படுகிறது. யான் யாது கைம்மாறு செய்வேன் என்பது குறிப்பெச்சம்.

 

by Swathi   on 21 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசை அறிஞர்களை அறிவோம்:மு_அருணாச்சலம் [1909 - 1992] தமிழிசை அறிஞர்களை அறிவோம்:மு_அருணாச்சலம் [1909 - 1992]
தமிழிசைப் பேரறிஞர்  எம். எம். தண்டபாணி தேசிகரின் 111வது பிறந்தநாள் ஆகஸ்ட் 27! தமிழிசைப் பேரறிஞர்  எம். எம். தண்டபாணி தேசிகரின் 111வது பிறந்தநாள் ஆகஸ்ட் 27!
சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்! சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது .. 
திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம் திருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்
தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்  தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம் 
"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்" -தேசியக் கருத்தரங்கம்
குணங்களுக்கேற்ற  இராகங்கள் குணங்களுக்கேற்ற இராகங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.