LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கொண்டுவரும் நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ஒரு புதிய முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதாவது, குழந்தை தொழிலாளர் முறையை கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கடிதங்கள் அனுப்பி குழந்தை தொழிலாளர் முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என வாழ்த்துக்களை கூறி. நீங்கள் வசிக்கும் ஊரில் உங்களைப் போல் பள்ளிக்கு போகாமல், கடை, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகள் இருக்கின்றனர். ஆடிப்பாடி மகிழ வேண்டிய வயதில், திருமணம் செய்து, குடும்ப பாரம் சுமக்கும் சூழலும் நிகழத்தான் செய்கிறது. அவர்களுக்கு, நான் புத்தாண்டு வாழ்த்துகளை கூற முடியாது. காரணம், அவர்களது வாழ்க்கை இனிமையாக இல்லாமல், கசப்பானதாக இருக்கும். நீ நினைத்தால், அவர்களின் வாழ்க்கையை இனிப்பாக்க முடியும். உன் தோழன், தோழி, குழந்தை தொழிலாளர் ஆவதையும், குழந்தை திருமணம் செய்வதையும் தடுக்க முடியும்.

 

உன்னுடைய ஒரு தொலைபேசி உரையாடல், எஸ்.எம்.எஸ். போதும்; உன் நண்பனின் தலை எழுத்தை மாற்றலாம். என்னை 94441 84000, ஆர்.டி.ஓ., - 94450 00444, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் - 94430 11440 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலும் தகவல் தரலாம். தகவல் கொடுப்போர் விவரம் வெளிவராது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு கல்வி, விடுதி வசதி இலவசமாக தரப்படும். உன் வாழ்க்கை இனிதானது போல், உன் தோழன், தோழி வாழ்க்கையும் இனியதாக மாற்ற, நீ எனக்கு உதவ வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறியிருக்கிறார். 

 

மாவட்ட ஆட்சியரின் இந்த கடிதத்திற்கு மாணவர்கள், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற முயற்சிகளை மற்ற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தும் போது குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

by Swathi   on 06 Jan 2014  1 Comments
Tags: Virudhunagar District Collector   District Collector Hariharan   Hariharan   Letter to students   School Students   விருதுநகர் மாவட்ட ஆட்சியர்   ஹரிஹரன்  
 தொடர்புடையவை-Related Articles
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !! குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !!
கருத்துகள்
07-Jan-2014 07:43:45 vaijanthimala said : Report Abuse
இந்த செயலுக்கு நன்றி .நானும் முயற்சி சைகீரன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.