LOGO

அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் [Sri bhagawan Lord dhanvanthari Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   தன்வந்திரி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ்ப்புதுப்பேட்டை- 632 513, வாலாஜாபேட்டை,வேலூர் மாவட்டம்.
  ஊர்   கீழ்ப்புதுப்பேட்டை
  மாவட்டம்   வேலூர் [ Vellore ] - 632 513
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு. இங்கு சஞ்சீவி ஆஞ்சநேயர், முனீஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நவ கன்னிகைகள், அத்ரி 
பாதம், விநாயகர், மஹிஷாசுரமர்த்தினி, கார்த்தவீர்யார்ஜுனர், சுதர்சன ஆழ்வார், ஒரே கல்லில் அமைந்த ராகு - கேது, வாணி சரஸ்வதி, ஸ்வர்ண ஆகர்ஷண 
பைரவர், அஷ்ட நாக கருடன், வேதாந்த தேசிகருடன் லட்சுமி ஹயக்ரீவர், ஸ்வர்ண அன்னபூரணி, காயத்ரி தேவி, வள்ளலார், காஞ்சி மகா ஸ்வாமிகள், ஷீர்டி 
பாபா, மகா அவதார் பாபா, ராகவேந்திரர், லிங்கத் திருமேனியில் எழுந்தருளும் 468 சித்தர்கள், கார்த்திகை குமரன், நவநீதகிருஷ்ணன், மரகதாம்பிகை சமேத 
மரகத லிங்கேஸ்வரர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, குழந்தையானந்த மகா ஸ்வாமி, பட்டாபிஷேக ராமர், வாஸ்து பகவான் - இத்துடன் மணம் கமழும் மூலிகை 
வனம், கவலைகள் போக்கும் காலச் சக்கரம் (27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் தனித் தனி விருட்சம் உள்ளது). இருபத்திநான்கு 
நேரமும் புகைந்து கொண்டிருக்கும் யாக சாலை, சுவாஹா பீடம், பஞ்ச தீபம் (அகண்ட தீபம்), பித்ரு தோஷம் நீக்கும் பாதம், திருவருள் அளிக்கும் குரு 
பிரார்த்தனை போன்ற சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.  

ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இவற்றோடு ஐந்தாம் வேதம் ஒன்றும் உண்டு. அதுதான் ஆயுர்வேதம். எண்ணற்ற மகரிஷிகள், நம்மிடம் இருக்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்து ஏராளமான மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள். இதன் தொகுப்பே ஆயுர்வேதம். அதாவது, மூலிகைகளை வைத்தே பல வியாதிகளைக் குணப்படுத்தும் முறைதான் இது. மனிதர்களின் ஆரோக்கியம் சிறந்து விளங்குவதற்கான பல நல்ல பயனுள்ள வழிமுறைகள் இந்த ஆயுர்வேதத்தில் உள்ளன.

யுத்த சாஸ்திரத்தை ரண வைத்தியம் எனவும் அழைப்பதுண்டு. அதாவது, போரில் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள காயங்களை ஆற்றுவது சஸ்திர சாஸ்திரம் எனப்படும். தனுஷ் என்றால், யுத்தம், யுத்த சாஸ்திரம், சஸ்திர சாஸ்திரம் என்ற பொருட்களும் உண்டு. இந்த சாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர் தன்வந்திரி பகவான். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம்.

பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரிய பகவானும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்
    அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்
    அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்
    அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்
    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்
    அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்
    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி

TEMPLES

    முருகன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     விஷ்ணு கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சூரியனார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     பிரம்மன் கோயில்
    சடையப்பர் கோயில்     சிவாலயம்
    பட்டினத்தார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     மற்ற கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     தியாகராஜர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சாஸ்தா கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்