LOGO

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் [Following the tradition of arulmigu Temple.]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   லட்சுமிநாராயணர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர்-613 101 தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   வரகூர்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 613 101
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார்.

     அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், "நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது.

     வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், "பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். "கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு "வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     பிரம்மன் கோயில்
    சூரியனார் கோயில்     சிவாலயம்
    முருகன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சித்தர் கோயில்     நட்சத்திர கோயில்
    வள்ளலார் கோயில்     தியாகராஜர் கோயில்
    நவக்கிரக கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    மற்ற கோயில்கள்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்