LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

விசும்பின் கொப்புளமாய் விண்மீன்கள் - வங்கனூர் மா.ந.சொக்கலிங்கம்

விண்மீன்கள் அழகானவை. காண்போர் ஆர்வத்தைத் தூண்டுபவை. விண்மீன்களைப் பாடாத கவிஞர்கள் இந்த வையகத்தில் இல்லை. ஆனால், இரு கவிஞர்களின் பார்வையில், விண்மீன்கள் கோபத்தின் கொப்புளமாய் வெடித்திருப்பதைக் காண முடிகிறது.

 கம்பரின் பார்வையில், புராணக்கதையோடு இணைந்த அவரது கோபமும், புரட்சிக்கவி பாரதிதாசனின் சமுதாயச் சிந்தனை வெளிப்பாட்டுக் கோபமும் இங்கே விண்மீனாய் கொப்பளிப்பதைக் காண்போம்.

 அகலிகை கற்பை, வஞ்சகன் இந்திரன் வஞ்சித்து விட்டான் என்பதை கெüதம முனிவர் அறிந்து, நெஞ்சம் வெதும்பினார். தவப்பலத்தால் அக்கொடியவனுக்குச் சாபமிட்டார். அந்தச் சாபத்தின் காரணமாக, இந்திரன் உடல் முழுவதும் கண்கள் வெடித்தன. அதைப்போல விசும்பின் மேனியிலும் கொப்புளமாய் உருவானதா இந்த விண்மீன்கள்? என்று கம்பர் தம் கற்பனைச் சிறகை புராணக்கதையில் புரவியோட்டுகிறார்.

 ""பரந்துமீன் அரும்பிய பசலை வானகம்
 அரந்தைஇல் முனிவான் அறைந்த சாபத்தால்
 நிரந்தரம் இமைப்பிலா நெடுங்கண் ஈண்டிய
 புரந்தரன் உருஎனப் பொலிந்தது எங்குமே!''

 விசும்பில் பூத்த கொப்புளமாய் உள்ள விண்மீன்களின் தோற்றத்தைப் புரட்சிக்கவி பாரதிதாசன் இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறார்.
 மண்ணில் உழைத்து வருந்தும் மக்கள் எல்லாம் வறியராம். அவர்கள் உரிமை கேட்டால், அவர்களைத் துச்சமாக நினைத்துத் தொல்லைப்படுத்தும் அற்பர்களுக்குப் பெயர் செல்வராம். பகலெல்லாம் நடக்கும் இந்தப் பரிதாபக் காட்சியை, மேலே இருக்கும் பரந்த வானம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இவ்வஞ்சகச் செயலைக்காண, நெஞ்சு பொறுக்காது வானகம், இரவு நேரத்தில் மேனியெல்லாம் வெம்மையாகிக் கொதிப்படைந்து கொப்புளங்களாய் வெடித்து விடுகிறது என்ற பொருள் தரும்படி கவி பாடியுள்ளார். அக்கவிதை வருமாறு:

 ""மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
 வறியராம்! உரிமை கேட்டால்
 புண்மீதில் அம்பு பாய்ச்சும்
 புலையர் செல்வராம் இதைத்தான்
 கண்மீதில் பகலி லெல்லாம்
 கண்டுகண் டந்திக் குப்பின்
 விண்மீனாய் கொப்ப ளித்த
 விரிவானம் பாராய் தம்பி!''

 நமக்கெல்லாம் விண்மீன்கள் கண்ணுக்கினிய காட்சியாய் மலர, இவ்விரு கவிஞர்களுக்கு மட்டும் விசும்பின் கொப்புளமாய் தோன்றியுள்ளதைக் காணும்போது இவ்விரு கவிஞர்களுடைய கோபத்தின் வெளிப்பாட்டை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.