LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

விவேக சிந்தாமணி!

ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழ மொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.

விளக்கம்:
முழு மனத்தோடு, மலர்ந்த முகத்தோடு, உண்மையோடு பேசி அளவளாவி உப்பு இல்லாத கூழையே கொடுத்தாலும், அதைச் சாப்பிடுவது அமிழ்தத்தைச் சாப்பிடுவதற்கு நிகராகும். அவ்வாறு இல்லாமல், கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு மா, பலா, வாழை ஆகிய மூன்று விதப் பழங்கள், பால் இவற்றோடு சோற்றைக் கொடுத்தாலும் ஏற்கெனவே இருந்த பசி, மேலும் கடுமையான பசியைத்தான் ஏற்படுத்தும்.
எனவே விருந்தோம்பல் என்பதை முழுமனம், அன்பு, இன்சொல் ஆகியவற்றுடன் செய்து பயன்பெற்று, மகிழ்வடைவோம்.

by Swathi   on 20 Nov 2017  1 Comments
Tags: Viveka Sinthamani   Sinthamani   சிந்தாமணி              
 தொடர்புடையவை-Related Articles
விவேக சிந்தாமணி! விவேக சிந்தாமணி!
கருத்துகள்
14-May-2018 07:27:42 N.suganthar said : Report Abuse
Now am i learner , this book is essential for our life liveing be a happy with good things
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.