|
|||||
கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !! |
|||||
நேற்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினாராம் நடிகர் விவேக். தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்பவர் கவுண்டமணி. அவரது நகைச்சுவை காட்சிகளுக்கு இன்றளவும் கூட வரவேற்பு இருக்கிறது. கவுண்டமணி இதுவரை சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நேற்று கவுண்டமணி தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கவுண்டமணி பிறந்தநாளை யொட்டி அவர் வீட்டுக்கே சென்று காமெடி நடிகர் விவேக் வாழ்த்து தெரிவித்தார். அப்போது விவேக்கிடம், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் கவுண்டமணி. தான் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிக் கூறியதும், "நீ ஒருத்தன்தான் காமெடி பண்ணிக்கிட்டிருந்த.. நீயும் சீரியஸா நடிக்க ஆரம்பிச்சிட்டியா?" என்று ஜாலியாகக் கேட்ட கவுண்டமணி, பின்னர் விவேக் ஹீரோவாக வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாராம். |
|||||
by Swathi on 26 May 2014 0 Comments | |||||
Tags: Goundamani Vivek கவுண்டமணி விவேக் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|