LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு ஓட்டு வங்கி அரசியலே காரணம் !

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் இன்று பேசுகையில் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம், பருப்பு வகைகள், தக்காளி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை திடீரென உயர காரணம் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலே என்று குற்றம் சாட்டினார்.
எந்த ஒரு பொருளின் விலையும் தேவையையும், வழங்குதலையும் பொறுத்தது. விவசாயம் என்பது இயற்கையையும், விவசாயியின் விருப்பத்தையும் பொறுத்து அமைவது. ஒவ்வொரு முறையும் வெங்காயத்தின் விலை உயரும் போதும், அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் அதை மிகவும் பெரிது படுத்தி வெங்காய ஏற்றுமதியை தடைசெய்தும், அதிக செலவு செய்து இறக்குமதி செய்தும், விற்பனை மற்றும் சேமிப்பதில் தேவையில்லாத பல கட்டுப்பாடுகளை விதித்தும் சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்துகின்றனர். இதன் விளைவாக விலை குறைகிறது. அதோடு சேர்ந்து பயிரிடுதலும் குறைகிறது. இந்த சுழற்சி முடிவில்லாமல் தொடர்கிறது. கடைகளில் கிலோ ரூ 30 முதல் ரூ 40 வரை விற்கப்படும் தக்காளி,விரைவில்  விவசாயிக்கு கிலோ ரூ 2 கூட பெற்றுத்தராது. ஒவ்வொரு வருடமும் போட்ட முதலை கூட எடுக்க முடியாத காரணத்தினால் பல விவசாயிகள் தங்கள் பயிரையே அழிக்கும் கொடுமை நடக்கிறது.
இத்தனை வருட தோல்விகளிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சீக்கிரம் அழுகாத பண்டங்களை சேமிக்க தேவையான கிடங்குகளை ஏற்படுத்தி, அந்த கிடங்குகளில் விவசாயிகள் சேமிப்பதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு கடன் வழங்க வசதி  செய்ய வேண்டும். அழுக்கக்கூடிய பண்டமாக இருப்பின், அதை உடனடியாக பதப்படுத்தும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அறுவடை பொய்த்தால் கூட , அதனால் எந்த பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்கும்.
நம்முடைய இறக்குமதியில் சமையல் எண்ணெய் மற்றும் பறுப்பு வகைகள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் நம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இறக்குமதிக்கு வரிவிதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமையல் எண்ணெய் மற்றும் பறுப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்க பயன்படுத்தவேண்டும். இப்படி ஒரு கொள்கை உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்து, நமது மொத்த தேவையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும். இப்பொழுது உள்ள  நடப்பு கணக்கு பற்றாக்குறை சூழலில்,இதன் மூலம் அரசாங்கம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிய செலாவணியை சேமிக்கலாம்.
ஊடகங்களும் குறுகிய கால விலையேற்றம் பற்றி செய்தியளிக்கும் பொழுது அடிப்படை பொருளாதார விதிகளையும்,நீண்ட கால நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நல்வாழ்வுக்கும் தேவையான கொள்கைகளையும் மனதில் வைத்து செயல்படவேண்டும். இவ்வாறு டாக்டர் ஜே.பி கூறினார்.

Vote bank politics to blame for rise in prices of essentials

Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan today termed the unusual spurt in prices of certain essential commodities like onion, tomato, pulses and edible oils as a clear indictment of short-term, knee-jerk vote bank politics pursued by successive Governments and political parties.
In a media statement, Dr. JP said, “The price of any commodity is a function of demand and supply. Agriculture is subject to natural vagaries as well as farmers’ preferences and therefore gives rise to serious fluctuations in supply of commodities. Each time the onion price increases, the Government and political parties overreact and seek to ban exports, import them at any cost, impose unreasonable restrictions on trade and storage and depress the market. This in turn leads to the price collapsing and the crop acreage dwindling. This cycle repeats itself endlessly. Tomato, which now costs Rs.30 to Rs.40 a kg in the retail market, will not fetch even Rs.2 to the farmer soon. Every year, farmers destroy the crop as there is no prospect of recouping even the investment.”
 Dr. JP said that “after decades of such follies, we must learn lessons.” For non-perishable commodities, adequate storage should be provided and farmers enabled to get pledge loans on the produce to meet family and crop expenses. In case of perishable commodities, aggressive food processing facilities should be put in place so that the failure of crop in one season does not result in serious shortages.
 Dr. JP said that it is again India’s short-term, vote bank policies that are contributing to large-scale imports of cooking oil and pulses year after year.  The Government should boost indigenous production by imposing moderate import tariffs on such commodities and plough the revenue thus realized to boost production of pulses and oilseeds. Such a policy will ensure food security and increase the income of farmers which in turn will lead to an increase in aggregate demand and economic growth. It will help the Government save more than $10 billion of precious foreign exchange in these times when the country is going through a serious current account deficit.
 Dr. JP appealed to media to exercise restraint in depicting short-term fluctuations in prices because of the operation of basic economic laws but focus on policies that help the country and the farmer in the long term.   

by Swathi   on 29 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.