LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

உ - திரை விமர்சனம் !!

இயக்கம் : ஆஷிக் 

 

நடிப்பு :

 

தம்பி ராமையா

 

வருண்

 

மதன்

 

சுமைல் செல்வா

 

நேஹா

 

இசை : அபிஜித் ராமசாமி

 

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நேற்றுவரை வெளிவந்த அனைத்து உதவி இயக்குநர்களைப் பற்றிய படங்களும் அழுகாச்சி காவியங்களாகவே இருக்கின்றன. இவற்றிற்க்கெல்லாம் விதி விலக்காய், உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை மிகவும் ஜாலியாக சொல்லியிருக்கும் படம்தான் உ. 

 

இப்போ கதைக்கு போகலாமா......

 

தமிழ் சினிமாவில் படம் இயக்குவதற்கு வாய்ப்பு தேடும் ஒரு வயது முதிர்ந்த உதவி இயக்குநராக வருகிறார் கணேஷ். அதுதாங்க நம்ப தம்பி ராமையா.. இவருக்கு மூன்று நண்பர்கள். இவர்களும் உதவி இயக்குநர்கள்தான். 

 

சில ஆண்டுகளாகவே கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி கதை சொல்லும் கணேஷ்க்கு திடீரென ஒரு கம்பெனி படம் இயக்கும் வாப்ப்பைத் தருகிறது. நேராக அறைக்கு வந்த கணேஷ் தன் நண்பர்கள் மூன்று பேரையும் தன்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றும்படி கேட்கிறார். ஆனால் அவர்களோ தன்னை விட நீ ஒன்றும் புத்திசாலி இல்லை எனவே உன்னுடன் சேர்ந்து வேலை பார்க்க முடியாது என்று சொல்லி, உன்னால் தனியாக படம் இயக்க முடியாது என்று சவாலும் விடுகிறார்கள். 

 

ஒரு நாள் காவல்நிலையத்தில் சினிமா லட்சியம் கொண்ட நான்கு நண்பர்களை சந்திக்கிறார் கணேஷ் . அவர்களிடம் சினிமா ஆர்வம் ரொம்பவே இருக்க, அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் கணேஷின் பழைய நண்பர்களோ, அந்த பட நிறுவனத்தின் மேனேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு கணேஷ்க்கு முட்டுக் கட்டை போட முயற்சிக்கின்றனர். இந்த சோதனைகளை மீறி கணேஷ் படம் எடுத்து வெற்றி பெற்றாரா? நண்பர்களுடனான சபதத்தில் வெற்றி பெற்றாரா என்பது உ படத்தின் மீதி கதை.

 

படத்தின் முதல் பாதி படு வேகமாக நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்யும் திரைக்கதை அதன் பிறகு சரியாகி மீண்டும் ஜெட்டாக பயணிக்கிறது. படம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ரொம்பவே ஜாலியாக சிரிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

 

‘பக்கத்து ஊர்ல ஒருத்தன் ஜெயிச்சா கொண்டாடுறீங்க, ஆனா கூடவே இருக்கிற ஒருத்தன் ஜெயிச்சா மட்டும் உங்களால ஏன்டா தாங்கிக்க முடியலை’ என்பது போன்ற வசனங்கள். படத்திற்கு மேலும் சிறப்பு. 

 

வயதான உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமைய்யாவும், அவருடன் வரும் பையன்களும் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது. 

 

உ படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அபிஜித் ராமசாமி. பாடல்கள் அனைத்தும் கேட்க இதமாக இருக்கிறது. படத்தை இயக்கி இருக்கிறார் ஆஷிக். 

 

மொத்தத்தில் உ ஒரு காமெடி ஜூ....... 

by Swathi   on 07 Feb 2014  0 Comments
Tags:    உ கதை   உ திரை விமர்சனம்   உ சினிமா விமர்சனம்   உ விமர்சனம்   உ படம்   உ தம்பி ராமையா  
 தொடர்புடையவை-Related Articles
உ - திரை விமர்சனம் !! உ - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.