LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம்

வழக்கமாகவே பல இலக்கியக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் 38-ஆண்டுகால வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், அமெரிக்கவாழ்த் தமிழர்களின் தமிழிலக்கிய ஆர்வத்தினைத் தூண்டும் வண்ணமும் தூண்டிய ஆர்வத்தினை மேலும் வளர்க்கும் விதமும் அமைந்திருக்கும் வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து பிப்ரவரி, 16, 2014 ஞாயிறு அன்று மேரிலாந்து மாநிலத்தில் சிறப்பு இலக்கியக் கூட்டம் ஒன்றினை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக தாயகத்தில் இருந்து வந்திருந்த  தமிழறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு என்னும்  தலைப்பில் உரையாற்றினார்.  மேலும் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகைதந்த சிறப்பு அழைப்பாளர் பேராசிரியர் முனைவர். வாசு அரங்கநாதன் அவர்கள் சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இருவரின் சொற்பொழிவும்  இலக்கியச் சுவைஞர்களுக்கு அரிய விருந்தாக அமைந்தன. திரு. மறைமலை இலக்குவனார் அவர்கள் தமிழரின் கடவுள் முருகன் வரலாறு எவ்வாறு இமயம் முதல் குமரிவரை பரவி இருந்தது, அது உலகின் எந்த நாடுகளில் எல்லாம் எப்படி பரவியிருந்தது, அதனை நம் சமூகத்தில் நிலவிய நுண்அரசியல் என்ன விதமாகத் தாக்கி இருந்து வந்துள்ளன போன்ற பல்வேறு தகவல்களை ஆதாரங்களுடன் விவரித்தார்.  இந்த உரை அனைவரும் கேட்கவேண்டிய உரை. இதைக் கீழ்க்காணும் கணொலி சுட்டியில் கேட்டு பயனடையுங்கள். 


சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் - பேராசிரியர் முனைவர். வாசு அரங்கநாதன் , பென்சில்வேனியா பல்கலைக்கழகம்.

http://goo.gl/iv1pm1

 

"தமிழ் பண்பாட்டுக் கூறுகளில் சமயம் " - டாக்டர் அரசு செல்லையா.

 http://goo.gl/Wzc77g

தமிழறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 
"இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு "

http://goo.gl/JX5Sce


திருவாளர் கொழந்தவேல் இராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி இந்நிகழ்ச்சியைத்  தொடக்கி வைத்தார். திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்தினார். செல்வி இனியாள் இரகுராஜ் சமய இலக்கியப் பாடல்கள் பாடி மகிழ்வித்தார், முனைவர் அரசு செல்லையா அவர்கள்  “தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் சமயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். திரு. சுந்தர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். முனைவர் திரு. முத்துவேல் செல்லையா அவர்கள் பட்டயம் வழங்கி பேராசிரியர் இலக்குவனார் அவர்களைச் சிறப்பித்தார். திருமதி லதா கண்ணன் அவர்கள் சமய இலக்கியப் பாடல்களைப் பாடி விழாவை சிறப்பித்தார்.

 

இதில் வாசிங்டன் வட்டாரப் பகுதியைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் பலர் பல  தலைப்புகளில் மிக அருமையாகப் பேசினர். தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. ஜான் பெனடிக்ட் (தேம்பாவணி: காப்பியச் சிறப்பு), திருமதி.மல்லிகா ஜம்புலிங்கம் (அனைத்துச் சமயங்களையும் அரவணைக்கும் மொழி), முனைவர் மீனாட்சி சந்திரசேகர் (கம்பராமாயணம்:சில இலக்கிய வருணனைகள்), மருத்துவர் பா. ராதாகிருஷ்ணன் (சந்தப்பாட்டு:படிக்காசுப் புலவர்), முனைவர் நா.சேதுராமன் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்: ஒரு தகவல்தளம்), கவிஞர் திரு. பெரியசாமி .மகேந்திரன்(தத்துவ ஞானி: தாயுமானவர்), முனைவர் ஜெயந்தி சங்கர் (ஆச்சியர் குரவையில் கண்ணன் வழிபாடு), திரு.வே.செந்தில்முருகன் (சமய இலக்கியத்தில் மனிதநேயம்), திரு.மா.செல்வகுமார்(சித்தர் பாடல்கள்:உட்பொருள் விளக்கம்) ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது,  நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டி இருந்தது.

 

திரு. நாஞ்சில் இ. பீற்றர் அவர்களின் கருத்தாக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை திரு. சுந்தர் குப்புசாமி அவர்கள்(தமிழ்சங்கத்தின் துணைத்தலைவர்) இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.  தமிழ்ச்சங்கப் பொருளாளர் நன்றி கூற, இலக்கியக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

 

11
by Swathi   on 17 Feb 2014  0 Comments
Tags: Washington Tamil Sangam   Tamil Sangam   Ilakkiya Vattam   வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்   வாசிங்டன்   இலக்கிய கூட்டம்   வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம்  
 தொடர்புடையவை-Related Articles
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்
அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள்
மதுரை அக்ஷயா அறக்கட்டளை க்கு நிதிசேகரிப்பு இசை நிகழ்ச்சி மதுரை அக்ஷயா அறக்கட்டளை க்கு நிதிசேகரிப்பு இசை நிகழ்ச்சி
அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும். அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.