LOGO
  முதல் பக்கம்    மற்றவை    பொதுசேவை Print Friendly and PDF

பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால்போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர். 



ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக்  கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையில ேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான்  சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். 

 

நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச்சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாகசமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது.மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்.

 

நன்றி : இணையம்

by Swathi   on 04 Mar 2014  3 Comments
Tags: Nagaraj   Great Man Nagaraj   We Can\'t Live for money   Panam   பணம்   நாகராஜ்   வாணியம்பாடி  
 தொடர்புடையவை-Related Articles
ஓட்டுக்கு பணம் : தகவல் கொடுத்தால் பரிசு !! வருமான வரித்துறை அறிவிப்பு !! ஓட்டுக்கு பணம் : தகவல் கொடுத்தால் பரிசு !! வருமான வரித்துறை அறிவிப்பு !!
பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்  நாகராஜ். பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !! ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !!
கருத்துகள்
14-Apr-2018 02:51:02 கே.ஆர்.மகேந்திர குமார் said : Report Abuse
அன்புடையீர், ஜோலார்பேட் இரயில் நிலையம் அருகில் திரு நாகராஜ், அவரது ஏலகிரி ஹோட்டலில், ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்கும் இலவசமாக உணவு வழங்குவதை வலைதமிழில் கண்டு, இந்த பதிவை செய்கிறேன். ஓய்வு பெற்ற அரசு ஊழியனான நான் கடந்த 2015 இல் வெறும் 30 புத்தகங்களை வீட்டிற்கு வெளியே ஒரு இரும்பு அலமாரியில் வைத்து புதுவிதமான,ஆளில்லா "ஆர்.ஏப்.எல்" நூலகம்(Read & return Free Library) ஒன்றை உருவாக்கினேன். 24 நேர்மும் இயங்கும் அந்த நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் (கால அவகாசம் கிடையாது) எடுத்த இடத்தைத் தவிர வேறு இடத்தில் உள்ள "ஆர்.எப்.எல்" இல் திருப்பித் தரலாம்.நூலகத்தில் சேர்வதற்கோ, புத்தகத்திற்கோ கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.வீட்டில் வீணாகக் கிடக்கும் புத்தகங்களை வீதிக்குக் கொண்டு வந்து பலருக்கும் பயன்பட வைப்பதே இதன் நோக்கம். பொது மக்களின் அமோக ஆதரவால், இன்று (ஏப்ரல்,2018 இல்), 10000 புத்தங்களாகவும் 68 இடங்களாகவும் விரிவடைந்துள்ளது.தனி ஒருவனால் இவ்வளவு நடந்தால், அனைவரும் சேர்ந்து எவ்வளவு செய்யலாம்? wwwrfllibrary .com
 
21-Sep-2016 03:42:43 சுரேஷ் said : Report Abuse
ஹாய்: நானும் நினைப்பதுண்டு இப்படி ஏதாவது செய்ய வேணும்னு அனா நினைப்பதோடு மட்டுமே செயல் ல இல்ல. மிக்க மகிழ்ச்சி இப்படியும் ஒருவர்.
 
29-May-2016 04:06:09 rajharao said : Report Abuse
மிக மிக நன்றி நாகராஜ் உங்கள் panii மிக சிறந்த ப்பி வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டுகிரிர்கள் உங்களுக்கு எனது நன்றி கலந் அவாழ்துக்கள் நீங்களும் உங்கள் பின் வரும் சந்ததியாரும் மிக சிறப்பொடு iruppargal அன்புடன் ராஜ்ஹராவ் thriukoilur
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.