LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!

சமூக வலைதளங்களில், தேர்தல் பிரச்சாரம் செய்ய கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 

அடுத்த இரண்டு மாதத்தில், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களை கவர்வதற்காக, அரசியல் கட்சிகள், நாளிதழ்கள், தொலைகாட்சிகள், இணையதளங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்கின்றன. ஏற்கனவே, நாளிதழ்கள், மற்றும் தொலைகாட்சிகள் ஆகியவற்றில், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வரைமுறை படுத்தியுள்ள தேர்தல் ஆணையம், தற்போது இணையதள விளம்பரங்களையும் வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,  

 

இணையதளங்கள், இணையதளம் சார்ந்த ஊடங்கங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில், எந்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது. 

 

இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள், தகவல்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம், இவற்றை தயாரிப்பதற்காக செய்யப்படும் செலவு ஆகியவற்றை கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் குறிப்பிட வேண்டும்.

 

கட்சிகள், வேட்பாளர்களை தவிர்த்து, மற்றவர்களோ அல்லது நிறுவனங்களோ, அமைப்புகளோ வெளியிடும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள், விளம்பரங்களை கையாள்வது பற்றி மத்திய தகவல் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்து வருகிறது.

 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய இ-மெயில் முகவரி மற்றும் சமூக வலைதளங்களின் கணக்கு விவரங்களை படிவம்-26ல் அளிக்கப்படும் வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும். 

by Swathi   on 25 Oct 2013  0 Comments
Tags: தேர்தல் ஆணையம்   இணையதளம்   சமூக இணையதளம்   அரசியல் வேட்பாளர்கள்   தேர்தல் ஆணையம்   Social Websites   Election Commission  
 தொடர்புடையவை-Related Articles
தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !! தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !!
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !! வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !!
ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !! ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !!
விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !! விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !!
தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !! தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.