LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (14 – 08 – 2016 முதல் 20 - 08 – 2016 வரை)

மேஷம்

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி  

இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவுவது உறுதி. ஆயினும் குழந்தைகளின் தொல்லை இருக்கும். அக்கம் பக்கத்தாருடனான உறவு திருப்திகரமானதாக இருக்கும். தொழிலுக்கும், வியாபாரத்துக்கும் சிறப்பான வாரம். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும்.

பரணி   

இந்த வாரம் மாதரால் மனமகிழ்ச்சி ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். விரைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். .  வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபம் அதிகரிக்கும்.

கார்த்திகை  1 ஆம் பாதம். 

இந்த வாரம் தாராளமான தனச்சேர்க்கையாலும், சுபகாரிய நிகழ்ச்சிகளாலும் மனதில் சந்தோஷம் பெருகும். தெய்வீக வழிபாடுகளால்  நிம்மதி நிலவும். திடீர் பயணங்களால் நன்மை ஏற்படும். தாயாரின் உணவு உபசரிப்பால் ருசியாக உண்டு மகிழ்வீர்கள். சிலருக்குத் துன்பங்கள் வந்து விலகும். குழந்தைகளால் மனக்கவலைகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடர்புகளால் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.


ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் 

இந்த வாரம் கணவன், மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எழலாம். புதிய தொடர்புகள் மகிழச்சி தரும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தனவரவு குறையும் காலமாதலால், வீண்செலவுகளைக் குறைப்பது அவசியம். உங்களால் கூறப்படும், ஒரு வார்த்தை, ஒன்பதாக மாறி, பரப்பப்படும். எனவே, வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. புதிய தொழில் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

ரோகிணி   

இந்த வாரம் இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்பட்டு பொருளாதார நிலை மேம்படும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் 

இந்த வாரம் பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். நான்கு சுவர்களுக்குள் வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் வெளிவராது காப்பது அவமானங்களைத் தவிர்க்கும்.


மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் 

இந்த வாரம் வீட்டில் சுகபோகங்கள் அதிகரிக்கும்.  வாக்கால் வருமானமும், குடும்பத்தில் குதூகலமும் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியால் வாழ்க்கையில் பேருயர்வு ஏற்படும். புதுவீடு கட்டுவதற்கான வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைகளுக்குப் பிறகே கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்களைக் குறைக்க, அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

திருவாதிரை 

இந்த வாரம் தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும். வீட்டில் திருமணம் போன்ற நற்காரியங்களில், தாமதம் ஏற்பட்டாலும், மிகச்சிறப்பாக நடைபெறும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். தந்தைவழி உறவுகள் உதவி செய்வார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் அதிகப்படியான வருமானங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குப் புத்தி சாதுர்யமும், அறிவு விருத்தியும் ஏற்படும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.

இந்த வாரம் பணவரவுகள் அதிகரித்தாலும் தான, தர்மம் எனக் கையிலுள்ள பணம் கரையும்.  தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு நல்ல முன்னேற்றமான காலம். காற்றடிக்கும் போதே தூற்றி கொள்வது போல், நல்ல இலாபம் வரும் போதே சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

இந்த வாரம் தன்னம்பிக்கை உயரும். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். சிலருக்குக் கார் போன்ற சொகுசு வாகனங்கள் வாங்கும் உயர்வு நிலை ஏற்படலாம்.  தெய்வ சிந்தனைகளால் மனதில் பூர்ண அமைதி நிலவும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்குப் பணி நிரந்தரத்துக்கான ஆணைகள் கிடைத்து, மனதில் இன்ப வெள்ளம் பாயும். குடும்பத்தில் தம்பதிகளிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.

பூசம்  

இந்த வாரம்  வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற நடக்கும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். அறிஞர்களுக்குக் கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். குடும்பத்துடன்  சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதால் செலவுகள் அதிகரிக்கும்.  உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.  சிலருக்குப் பெண்களால் தேவையற்ற அவமானங்கள் ஏற்படலாம்.  

ஆயில்யம்  

இந்த வாரம் உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுபச்செய்திகள் வந்து சேரும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சிலருக்குப் பணி நிமித்தமாக, இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். நல்ல நண்பர்களின் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.


சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்  

இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. ச வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் தங்கள் கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். எழுத்தாளர்களின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். 

பூரம்  

இந்த வாரம் சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில்  முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஆயினும், உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும்.

உத்திரம்- 1 பாதம் 

இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், பழைய கடன்கள் அல்லது நோய்களால் கவலை ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்தும்  கட்டாயம் ஏற்படும்.  சிலருக்குத் திருமணம் போன்ற சுபகாரிய விரயங்கள் ஏற்படும். வெய்யில் கேற்ற நிழலுண்டு, வீசும் இன்பக் காற்றுண்டு என்பது போல், துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும். எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், உங்கள் சாதுர்யத்தாலும், சாமர்த்தியத்தாலும் ஊதித் தள்ளிவிடுவீர்கள்.


கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

இந்த வாரம் மனைவி, மக்களால் மகிழ்ச்சி நிலவும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உறவுகள் வருகையால் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். புதிய சொத்துக்கள் சேரும். பிறர் தயவை நாடவேண்டிய சூழல் உருவாகும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். செய்தொழில் சிறப்புற்று இலாபம் பெருகும்.

ஹஸ்தம்  

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருந்தாலும், கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசுபோன இடம் தெரியலே என கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படலாம். எனவே, சக்திக்கு மீறிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எந்தத் தொழிலையும் செய்ய மனம் போகாது. எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டுச் செய்யாமல் நிதானமாகச் செய்தால் வெற்றிகிட்டும்.

சித்திரை – 1,2 பாதங்கள் 

இந்த வாரம் பணவரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அனைத்து வசதிகளையும் பெற்று, புதிய ஆடை, ஆபரணங்களை அணிந்து மகிழ்வீர்கள். பலவகை யோகங்கள்,  ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆசிரியர்கள், தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் செல்வது நல்லது. 


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் 

இந்த வாரம் பிள்ளைகள் தங்கள் திறமையால் நற்பெயர் எடுத்துப் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பர். சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சிலருக்கு அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.

சுவாதி 

இந்த வாரம் தன வருமானம் அதிகரிக்கும். மனஅமைதியைப் பொருத்தவரை ஓரளவு அமைதி நிலவும். உடன் பிறப்புக்களிடம் இருந்து சகலவிதமான உதவிகள் கிடைப்பது போல், அக்கம் பக்கத்தாரிடமிருந்தும் ஒத்துழைப்புக் கிடைக்கும்.   அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் துறைகளின் மூலமாக வரவேண்டிய பண நிலுவைகள் கிடைத்து மகிழ்ச்சி எய்துவர். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள்  ஏற்படும்.  சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். .  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.   தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். பயணங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.


விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்  

இந்த வாரம் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள்.

அனுஷம்  

இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் நல்ல இசை கேட்டு மகிழ்வீர்கள். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டு  தானதருமங்கள் செய்வீர்கள். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்.

கேட்டை  

இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். சிலருக்குத் தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும், வாழ்க்கையில் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றங்கள், உயர்வுகள் ஏற்படும்.


தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்  

இந்த வாரம் மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  புத்திர பாக்கியம் ஏற்படும். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

பூராடம்  

இந்த வாரம் பெண்களின் அறிவுத்திறன் கூடும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்.  விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். பணியில் இருக்கும் பெண்கள் அலட்சியப் போக்கைக் கைவிட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற ஏற்றங்களை எதிர்பார்க்கலாம்.

உத்திராடம் –1 ஆம் பாதம் 

இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் 

இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது நல்லது. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

திருவோணம் 

இந்த வாரம் நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழ்ந்து, உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தியும் மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  ஞானத்தன்மை  அதிகரிக்கும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

அவிட்டம் 1,2 பாதங்கள்  

இந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.


கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள் 

இந்த வாரம் புண்ணியத்தல தரிசனங்களுக்கான வாய்ப்பு ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

சதயம் 

இந்த வாரம் நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.


மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப அமைதியும் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். குடும்பத்தாருக்கு அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். 

உத்திரட்டாதி 

இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்.

ரேவதி 

இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் கிடைக்கும் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்.

by Swathi   on 11 Aug 2016  0 Comments
Tags: Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்                 
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.