LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (03 – 12 – 2017 முதல் 09 -12 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர்.எம்.ஏ (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். காரியத் தடைகளும், சுறுசுறுப்பு இல்லாத நிலை உருவாகும். பக்தி, ஞானம் மேலிடும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  சுற்று வட்டாரத்தில் தங்கள் புகழும் மரியாதையும் கூடும்.  பயணத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர் அனுசரணை இருக்கும். அரசு வகை இலாபங்கள் ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சிலருக்குப் புத்திர பாக்கியம், புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
பரணி
இந்த வாரம் உங்களுக்குக் கல்வியில் வெற்றி கிடைக்கும்.  உயர் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். சிலருக்குப்  தொழிலில் பண முடக்கம் ஏற்படலாம்.  பட்டம், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  தாயின் மூலமாக இலாபம் ஏற்படலாம். கற்பனை வளம் பெருகும். போட்டி பந்தயங்கள் அரசுவகை இலாபம், வீட்டில் சுபகாரியங்கள், வெளியிடங்களில் வெற்றிக்கான பாராட்டுக்கள் ஆகியவை ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே அன்பு மிகுந்து ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பேரின்பம் அடைவர்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் தொலை தூரச் சுபச் செய்திகள் கேட்டு மனம் மகிழும். பலரும் வியக்கும் வண்ணம் பற்பல சாதனைகளைப் புரிந்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான வழிகள் பிறக்கும். தரும காரியங்கள் மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து முன்னேற்றம் அடைய முற்படுவது நல்லது. மனதுக்குப் பிரியமான மனைவியிடம் அன்பு பாராட்டி, அமைதியாக இருந்தால் ஆனந்தம் பெருகும்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. வெளியூர் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஞானிகளின், பெரியோர்களின் சந்திப்பால் மன அமைதியும், சந்தோஷமும் பெருகும்.  சிலருக்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.  தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமாகமும், குஷியாகவும் இருக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு, தொழில் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்.
ரோகிணி
இந்த வாரம் தனலாபம் எதிர்பார்க்கலாம்.  பிறரின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை எழலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை ஓரு சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லது. அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படலாம்.   தூய ஆடைகள் அணிந்து மிடுக்காக, நற்காரியங்கள் செய்து நல்லவர் என அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவர். அரசு மூலமாக எதிர் பார்த்த ஆதாயங்கள் எளிதாகக் கிடைக்கும்.  கேளிக்கை ஈடுபாடு, இனியது புசித்தல் மற்றும் ஸ்த்ரீ சுகம் என  பொழுது இனிமையாக் கழியும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாகப் பல வழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல ஆன்மிக குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படுத்துவார். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாம்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் உங்கள் அசாத்தியத் திறமைகளை வெளிக் காட்டுவதின் மூலமாக  அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நல்ல சேதிகள் நாடிவரும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான  தகவல்கள் வந்து சேரும். வாரத்தின், முதல் நாள் பயணத்தில் துன்பமும், பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.
திருவாதிரை
இந்த வாரம் உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் காரணமாக அதிகம் உழைப்பீர்கள். அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஓங்கும். அறிவுத் திறனும் கூடும். இனிய புதிய நண்பர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு தந்தையால் நன்மைகள் பல ஏற்படும். மகான்களின் தரிசனம் கிட்டும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது அது விஷயமாக பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும்.  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். பெண்களுக்கு வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் எதிர்பாராத இனிய விருந்துகள், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் வேண்டப்பட்ட கோரிக்கைகள் தடங்கலின்றி நிறைவேறும். நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும். சிலருக்கு உழைப்புக் குறைவானாலும்  ஆதாயம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் சிலர் மேன்மை அடைவீர்கள். சிலருக்குத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்.
பூசம்
இந்த வாரம் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்குச் செலவுகள் ஏற்படும்.  புதுப்புது முயற்சிகளால் செல்வ நிலை உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் மிகுந்த நட்புப் பாராட்டி  அதிக இலாபம் சம்பாதிப்பர்.  அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். துணிவுடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
ஆயில்யம்
இந்த வாரம் மனைவியின் அன்பால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டுக்குத் தேவை என்று விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புத்தக அச்சு மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்கள் வங்கிக் கடன் உதவியுடன் வெற்றி பெரும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.

சிம்மம் ( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் ஞானிகளின் உபதேசம் கேட்டு மனம் ஞானத் தன்மைக்கு மாறும். அரசுப் பெண் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சிறப்பான, திறமைமிக்க பணி  அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் பெறும். மேடைப் பேச்சாளர்களுக்கு மேன்மையான நிலை ஏற்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்குப் புதிய முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.
பூரம்
இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்த்த அளவு தனவரவு உண்டு. தெய்வ சிந்தனையாலும், தரும சிந்தனையாலும்  மனதில் அமைதி நிலவும். தொழில் வாய்ப்புக்கள் பெருகும். உடன் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு மிக்க பணியால் உற்பத்தி பெருகும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஏற்றமிகு வாரம். சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் சிறப்பான பலன்களைத் தரும்.  எதிர்பாராத தனவரவால் மனம் மகிழும். போட்டி, பொறாமைகளை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் முன்னேற்றங்கள் சுலபமாகும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  உயர் அதிகாரிகளின் உந்துதலால் ஏற்படும், இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய வியாபாரத் திட்டங்கள்  வெற்றி பெறுவதோடு, நல்ல காலமும் கனிந்து வரும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். பங்குச் சந்தை ஈடுபாடு இலாபம்  பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
ஹஸ்தம்
இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். மந்திர சித்தி செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மற்றும் பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கினை எட்டிவிடுவீர்கள்.
சுவாதி
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல உயர்வான முன்னேற்றங்கள் ஏற்படும்..

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும்.  வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.  புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும்.  சிலருக்கு அதிகாரப்  பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்
அனுஷம்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.  உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
கேட்டை
இந்த வாரம்  தங்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. உங்களின் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  
பூராடம்
இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆனால், தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பல வழிகளிலும்  பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தங்கள் அனுசரணையால் சீர்படும்.  சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், அதிகச் செலவுகளும் ஏற்படும். உங்களின் சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பக்தி மிக்க புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுவதால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பூமி, வீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள்  ஏற்படும்.  உயர்ந்த வாகன வசதி  ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.
திருவோணம்
இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு  புதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய  உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் திறமைகளை நிலைநாட்டிப் புகழ் பெறுவர். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடப்பது முன்னேற்றம் அளிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசப் பரிசுகள் கொடுத்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வர். பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். புத்திரர்களால் ஜெயமுண்டு.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும்.  புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாட்களாக வராத விருந்தினர்கள்  வந்து விருந்தாடி  மகிழ்வைத் தருவர்.. நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். பயணங்கள் இனிமை தரும். சினிமா, டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சதயம்
இந்த வாரம் குடும்பத்தோடு குதூகலமாக இருக்கப் போகும் குஷியான வாரம். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான  வாரம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கலாம்.   உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் தொல்லை குறையும்.  அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் தயவால்  பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்புக் கூடும் வாரம். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான குணத்தால் விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும். சந்தோஷங்கள் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும். தொடுத்த வழக்குகள் வெல்லும். உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும். தாய் வழியில் ஆதாயம் உண்டு. பால்வளம் பெருகும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் குடும்பத்தில் பலநாள் கனவுகள் நனவாகும்.  பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்குப் பிறர் பொல்லாப்பின் காரணமாக பயம் தோன்றலாம். தெய்வபலம் இருப்பதினால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
உத்திரட்டாதி
இந்த வாரம் கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். சுபச் செய்திகள் மன மகிழ்ச்சி தரும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர்.  பெண்களே! தங்கள் இல்லத்தில் மிக  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும்.
ரேவதி
இந்த வாரம் உறவுகள், உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக் கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மால் போன்ற இடங்களில் மனதுக்கு இனியவர்களுடன் சுற்றி, உணவகத்தில் இனியதாய்ப் புசிப்பீர்கள். சிலருக்குப் பொருள் சேதமும், புதிய கடன்களும் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அடங்கி நடப்பதே நல்லது. பெரியோர்களின் பேட்டியும், ஞானிகளின் தரிசனமும் கிடைக்கலாம். பல சாதனைகள் புரிவீர்கள். பிறருடனான வீண் மனஸ்தாபங்களைத் தவிர்கவும். 

by Swathi   on 02 Dec 2017  0 Comments
Tags: Natchathira Palangal   Vaara Natchathira Palangal   Rasi Palangal   Weekly Rasi Palangal   வார நட்சத்திர பலன்கள்   இந்த வார பலன்கள்   ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.