LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும் சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் பயணங்கள், வீடு மாற்றம் அல்லது தூரமான அல்லது விரும்பாத இடத்திற்குறிடமாற்றங்கள் ஆகியவை ஏற்படலாம்.
பரணி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்றாட வாழ்க்கையில் விரும்பத் தகாதவர்களின் குறுக்கீடுகள் இருக்கும். வீடு மற்றும் வாகனத்தில் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியது வரும். அதனல் ஏற்படும் செலவுகள் உங்கள் கையைக் கடிக்கும். சுயமுயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகளைத் தரும். புனித பயணங்கள் போவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தொழிலில் சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். எதிர்பாலருடன் சந்தோஷமான சந்திப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் பூஜா வழிபாடுகளலால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியார்களின் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும். குறுகிய காலத்திற்குக் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். துன்பம் மற்றும் செலவுகள் மிகுதியான பயணங்கள் தொல்லை தரும். விபத்துகள் மற்றும் காயங்களில் இருந்து தப்பிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  வெற்றிக்கு முன் ஏற்படும், தடைகளையும் தாமதங்களையும் கண்டு மனம் பேதலிக்கும்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள். அடிக்கடி ஏற்படும் பயணங்கள் தவிர்க முடியாத்தாகும். சிலரின் உடல் நலிவுறும். அதைக்கூட கவனிக்காமல் இன்புற நினைப்பார்கள். செலவுகள் அதிகரிப்பதால் பர்ஸ்ஸிலுள்ள பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும்.
ரோகிணி
இந்த வாரம் மடுப் போன்ற பணவரவை வைத்து, மலை போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். உடலில் ஏற்படும் உபாதைகளால் ஆஸ்பத்திரி வாசம்  ஏற்படலாம். சுறுசுறுப்பு, தைரியம், வெற்றி பெறுவதற்கான தூண்டுதல்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அள்ளித்தரும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் பிடிவாதம், வாக்குவாதம் ஆகிய இருவாதங்களால், மணவாழ்க்கை எனும் படகு ஆட்டம் காணும். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவர். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். அதுவே மனக் கஷ்டங்களுக்குக் காரணமாகும். எதிர்காலத் தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் காய் கனிந்து பழமாவது போன்ற இனிய பயணங்கள் ஆதாயம் தரும்.  உங்கள் திறமையின் காரணமாக பொருளாதார சிக்கல்கள் சீராக்கப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும்.  முழு மனதுடன் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் சிறப்பான ஆதரவை நல்குவார்கள். தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் உங்கள் விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும்  நிறைவேறும். பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை சிறப்பாக அமையும். சிலருக்குப் பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேறம் காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் உங்கள் உடன்பிறப்புகள் மூலமாகவும், குறுகிய தூரப் பயணங்கள் மூலமாகவும் நன்மை அடைவீர்கள். உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்  அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும். கூட்டாளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் உங்கள் மனதில்  குழப்பத்தைத் தரும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்.  பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். இரவுப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் சேவையில் ஈடுபட்டதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள்.
பூசம்
இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது இருக்கும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். எந்தவொரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். சீரான பொருளாதார நிலையால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள்.
ஆயில்யம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும். எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்
இந்த வாரம் நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பின்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்  அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். புதிய திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் தடைகள் ஏற்படலாம்.
ஹஸ்தம்
இந்த வாரம் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.   நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் நம்பிக்கைகளும், விருப்பங்களும் மனம்போல் நிறைவேறும். நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் ஆதாயம் தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.  தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.
சுவாதி
இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடின உழைப்புத் தேவைப்படும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனதில் அமைதியும் நிலவும். உயர் பதவிகள்  உங்களைத் தேடிவரும். திருமணம் ஆகாதவர்களுக்குக் கொட்டு மேளம் கொட்டும் நேரம் வரும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். புதிய சேமிப்புகளைத் துவங்கலாம். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள்.   உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.  மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
அனுஷம்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசாங்கம் தரும் பிரச்சனைகளால் கவலை எழும். புண்ணிய யாத்திரைகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். வெகு தூரப்பயணங்கள், வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றால் நன்மை ஏற்படும். இனிய நண்பர்கள் உதவிட இரு கரம் நீட்டுவர். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.
கேட்டை
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அரசு வேலை அல்லது தனியார் கம்பெனியில் உயர் அதிகாரி வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
பூராடம்
இந்த வாரம்  தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். பொதுப் பிரச்சனைகளில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள். மண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், மனத்தாங்கல்கள், சண்டை சச்சரவுகள், விவாகரத்து என சிக்கல்கள் எழலாம். சிலருக்கு எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். வெற்றிக்கான பாதைகளில் கல்லும் முள்ளுமாய் தடைகளையும், தாமதங்களையும் தாண்டி வெற்றி இலக்கை அடைவீர்கள். சமூக சேவைகள் வெற்றிகரமானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.
திருவோணம்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சதயம்
இந்த வாரம் பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
ரேவதி
இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.

by Swathi   on 01 Nov 2017  0 Comments
Tags: Rasi Palangal   Vaara Rasi Palangal   Abirami Sekar Rasi Palangal   Natchathira Rasi Palangal   Weekly Rasi Palangal   நட்சத்திர வார பலன்கள்   ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர் நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர்
இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ. இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ.
இந்த வார நட்சத்திர  பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (17 – 09 – 2017 முதல் 23 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (17 – 09 – 2017 முதல் 23 - 09 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (13 – 08 – 2017 முதல் 19 - 08 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (13 – 08 – 2017 முதல் 19 - 08 – 2017 வரை)
2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.