LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (2 – 10 – 2016 முதல் 8 - 10 – 2016 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

Cell – 99948 11158

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். சிலரின் சுறுசுறுப்பற்ற நிலையால், காரியத்தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.
பரணி
இந்த வாரம் மேல்மட்டத்திலுள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தனவரவு எதிர்பார்த்தபடி தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும், பெருமையும் சேரலாம். வியாபாரத்தில்  முன்னேற்ற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.  சிலருக்குத் தொழிலில் ஏற்படும் பின்னடைவு காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வியாபாரத் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். வீட்டில் உள்ளவர்கள் மீது வீணான கோபத்தைத் தவிருங்கள். புதிய தொழில் தொடர்புகளால் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப்பயன்களை அடைவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும்.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த  வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கைகொடுப்பர். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
ரோகிணி
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும்.  விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும். அரசுப் பணியாளர்கள் அயராத உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். நெருங்கிய நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். திடீர்ப் பயணங்களின் போது வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் ஏற்படும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்  
இந்த வாரம் பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு, பணவிஷயமான அலைச்சல்கள் அதிகம் இருக்கும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்
இந்த வாரம் .வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும்,  கௌரவத்தையும் அடைவீர்கள். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். பொதுச்சேவை  போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும்.வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம்.
திருவாதிரை  
இந்த வாரம் நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், மனோதைரியம் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தங்களுக்குக் கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது கழிந்து, மகிழ்ச்சி பொங்கும்.  நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம்.
பூசம்  
இந்த வாரம் தனவரவு, எதிர்பாலரால் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். பணியில் முன்னேற்றம். கீழே பணிபுரிவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும், வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். . வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  
ஆயில்யம்
இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து கௌரவத்தையும் அடைவீர்கள். தந்தை மகனிடையே இருந்து வந்த மனக்கசப்புக்கள் தீரும்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.
பூரம்  
இந்த வாரம் மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ள புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் தொழில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். உல்லாசப் பொழுதுபோக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம்.

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம்.
ஹஸ்தம்
இந்த வாரம் வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா எனச் செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள்  
இந்த வாரம் உங்கள் விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.  தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, நல்ல  பாராட்டும் பெறுவீர்கள்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்  
இந்த வாரம்  உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி  ஏற்படும். புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்து, ஆதாயம் தரும்..
சுவாதி
இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அரசுப் பணியில் உள்ளவர்கள்  மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்,  பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம்  இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். நீண்ட நாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி புனித யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள்.  .
அனுஷம்  
இந்த வாரம் உயர் பதவிகளை அடையும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம்.
கேட்டை
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.  மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான  முயற்சிகள் வெற்றி பெறும்.  சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மிகுந்த  எச்சரிக்கையுடன்  இருப்பது அவசியம். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.
பூராடம்  
இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முன் கோபத்தைக் குறைத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். இனிய பயணங்கள் மற்றும்  புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும்.  தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். அந்தஸ்து உயரும்.

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் மதிப்பு, கௌரவம் ஆகியவை உயரும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும்.
திருவோணம்
இந்த வாரம் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவால் உறவில் விரிசல்கள் ஏற்படலாம் பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி சமாதானமாகப் போவது நல்லது.  தங்கள் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது.
அவிட்டம் 1,2 பாதங்கள் –
இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும்.  புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் கெட்டி மேளம் கொட்டும் நேரமாதலால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான காலம் கனியும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். பல வகையான உயரக வாகன வசதி அமையும்.
சதயம்
இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்  
இந்த வாரம்  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பணவரவு அதிகரிக்கும்.  வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள்..

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும்..
உத்திரட்டாதி
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம்.
ரேவதி
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். அதிகாரம் மிக்கப் பதவிகளை அலங்கரிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். தொழில் புரிபவர்கள் புதிய எந்திரங்களை வரவழைத்து உற்பத்தியைப் பெருக்கி ஆதாயம் காண்பர். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.  அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.  

by Swathi   on 05 Oct 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.