LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்ல நாம் என்ன செய்யவேண்டும்?

பிற மொழிகளின் ஆதிக்கம், மற்றும் வெளிநாட்டு கலாச்சாரம் ஆகியவற்றால், தமிழ் எங்கே அழிந்துவிடுமோ, என அஞ்சிய காலத்தில், தமிழ் மொழியை, கணினியிலும், அலைபேசிகளிலும் பயன்படுத்தும் மின்னணு மொழியாக, மாற்றிய சில தமிழ் அறிஞர்களுக்கு முதலில் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், இவர்கள் இதை செய்யவில்லை என்றால், உலகில் உள்ள மொழிகளில் சிறந்த மொழியாம் தமிழ் மொழி இன்னும் சில ஆண்டுகளில் அழிந்திருக்கும். 

 

ஆரம்பத்தில், தமிழ் மொழி, கணினியில் மின்னணு மொழியாக வந்த போது, அதை மின்னஞ்சலில், தகவல் தொடர்பில் தமிழ் மக்கள் பெரிதும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வரவால், தமிழ் தட்டச்சு பலகையின் வாயிலாக எளிமையாக எல்லோரிடமும் சென்று சேர்ந்தது. தமிழ் மொழியை பயன்படுத்தவே மாட்டேன் என்று சொல்லும் நபர்களும் கூட வேறு வழியின்றி தமிழை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தமிழில் செய்தி வெளியிட்டால் தான் அது தமிழக மக்களிடம் சென்று சேருகிறது என்ற உண்மை அறிந்த பின் சமூக வலைத் தளங்களில் உள்ள பிரபலங்கள் கூட தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டனர். இப்படி கணினியில் மெல்ல மெல்ல தமிழ் வளர்ச்சி அடைந்தாலும், அலைபேசியில் தமிழை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோ மிக குறைவு தான். அலைபேசியில் தொழில்நுட்ப பிரச்சனைகள், தமிழை பயன்படுத்த இயலாமை, விரும்பாமை போன்ற காரணத்தால் தமிழ் மொழி வளராமல் இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் , பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த அலைப்பேசியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே நோக்கியா, எச் டி சி போன்ற அலைபேசிகளில் மின்னணு தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

தற்போது சாம்சங் அலைபேசி நிறுவனம் கூட முழுக்க முழுக்க அனைத்து செயலிகளையும் தமிழில் பயன்படுத்தும் வசதியை உருவாக்கியுள்ளது. அதாவது தமிழை அலைபேசியில் செயலாக்க மொழியாகவே நாம் பயன்படுத்தலாம். விளையாட்டு, அரட்டை, இசைக் கருவிகள், மற்ற தொழில் நுட்பங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பயன்படுத்தலாம். இதன் மூலம் தமிழ் மொழி தமிழர்களிடையே கலப்பில்லாமல் சென்றடையும். மக்களும் இதுபோன்ற தமிழ் கலைசொற்களை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அலைபேசியை தமிழ் வழியில் மாற்றுவது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் அலைபேசிகளில் தமிழ் மொழியன் பயன்பாடு அதிகரித்தால், தமிழ் படித்த இளைஞர்களுக்கு முன்னணி அலைபேசி நிறுவங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் புதிய கலைசொற்களை உருவாக்கவும், தமிழில் புதிய தொழில் நுட்பங்களை மேம்படுத்தவும் இது பெரிய அளவில் துணை புரியும். எப்படி பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பின்பு பேஸ்புக் வலைதளம் தமிழ் மொழிக்காக பல்வேறு வசதிகளை உருவாக்கி கொடுத்ததோ அவ்வாறே இந்த அலைபேசி நிறுவனங்களும் அதை சார்ந்த மென்பொருள் நிறுவங்களும் தமிழ் மொழியில் பல்வேறு வசதிகளை தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். தமிழ்படித்த தமிழர்களுக்கு வேலை வாய்புகள் பெருகும். ஆகவே இதை படிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய அலைபேசியை தமிழுக்கு மாற்ற முயற்சி செய்யவும்.  

 

இயல், இசை, நாடகத்தமிழாக வளர்ந்து வந்த நம் தமிழ், தற்போது, மின்னணு தமிழாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை தமிழர்கள் அனைவரும் முறையான வழிகளில் பயன்படுத்தினால், அழிந்து வரும் மொழிகளில் இருந்து தமிழ் மொழியை காப்பாற்றி, நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கலாம். எனவே, நாம் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிப்போம், தமிழ்மொழி வளர்ச்சிக்கு துணை நிற்போம்.

 

வாழ்க தமிழ் !! வளர்க தமிழின் பெருமை !!!

by Swathi   on 26 Aug 2013  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
13-May-2015 23:48:19 சரவணன் said : Report Abuse
வலைத்தமிழ்.காம் க்கு என் இனிய வணக்கம். நன் என் நிறுவனத்தில் உறுதிமொழி ஒன்றை தமிழில் தயர்செஇயவெண்டும். ( நிறுவன பணியாளர்கள் தினமும் பணியை தொடங்கும் முன் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒரு உறுதிமொழி எவ்வாறு அமைக்கவேண்டும் என்று எனக்கு கொஞ்சம் உதவி செயுங்கள் தோழரே ......
 
16-Jul-2014 04:48:48 சசிமணி குருப்பந்தொடி said : Report Abuse
எத்துனை கலாசாரம் அடிமைப்படுத்தி வீழ்த்த நினைத்தாலும் ...எத்துனை படையெடுப்புக்கள் எம் பண்பாட்டை சூறையாட வந்தாலும் ....எத்துனை மொழிகள் எம்மொழியை புணர்ந்து கற்பிழக்க சதி செய்தாலும் ...எல்லா மொழிகளும் செத்த பின்னாலும் இந்த பூமியில் ஓங்கி ஒலிக்கும் எம் மொழி ஏனெனில் அது இறையனார் கண்ட மொழி ...ஷண்முக கடவுள் பேசிய மொழி ...அகத்திய குறுமுனி இசைத்த மொழி ....தொல்காப்பிய மகா முனி இலக்கணம் வகுத்த மொழி ....என்றென்றும் இங்கே வாழ்ந்திருக்கும் எம் தெய்வ திரு தமிழ்மொழி ......வாழ்க ....வாழ்க .....வாழ்கவே .....எம் பைந்தமிழ் தேன் மொழி வாழ்கவே .....என்று வாழ்த்துவோம் .....வாழ்த்துவோம் .....வாழ்த்துவோம் ....தாய் தமிழையே வணங்குவோம் ..........
 
23-Feb-2014 07:59:24 ா.கணேசன் said : Report Abuse
வலைதளங்கல் மற்றும் கைபேசிகளில் தமிழ் எழுத்துகளில் வட இந்திய எழுத்துக்களான "ஷ்ஹ்" வார்த்தைகள் தமிழ் வார்த்தை போன்று சித்தரிக்கப்படுகிறது இதை தவிர்க்கப்பட வேண்டும்.
 
23-Feb-2014 07:59:03 ா.கணேசன் said : Report Abuse
வலைதளங்கல் மற்றும் கைபேசிகளில் தமிழ் எழுத்துகளில் வட இந்திய எழுத்துக்களான "ஷ்ஹ்" வார்த்தைகள் தமிழ் வார்த்தை போன்று சித்தரிக்கப்படுகிறது இதை தவிர்க்கப்பட வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.