|
|||||
கோதுமை அப்பம் |
|||||
தேவையானவை : கோதுமை மாவு – 1 கப் வெல்லம் – 1/2 கப் ரவை – 1 டேபிள்ஸ்பூன் மைதா – 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1/4 கப் ஏலப்பொடி - டீஸ்பூன் எண்ணெய் -பொரிப்பதற்கு செய்முறை: 1.முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக் கொள்ளவும். 3.பிறகு அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 4.ஒரு கடாயிப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|