|
|||||
கோதுமை பாதாம் பர்ஃபி |
|||||
தேவையானவை : கோதுமை மாவு -100 கிராம் பாதாம் தூள் - 50 கிராம் , சர்க்கரை-125 கிராம் நெய்- 1டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் பர்ஃபி செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். 2.ஒரு கடாயில் சிறிது நெய்யை ஊற்றி, கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். 3.அதனுடன் பாதாம் தூளை போட்டு இடையிடையே நெய்யை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடங்கள் நன்கு கிளறிக் கொண்டே வரவேண்டும். கிளறிய மாவு நன்றாக வறுப்பட்டதும் கிளறி அடுப்பை அணைத்து விடவும். 4.அதே நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சர்க்கரையை போட்டு கிளறி மிதமான தீயில் கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும். கம்பி பாகு வந்ததும் உடனே மாவு கலவையில் கொட்டி அடுப்பை மிதமான தணலில் வைத்து கைவிடாமல் கிளறவேண்டும். 5.ஓரிரு நிமிடங்களில் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆரம்பிக்கும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|