LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு தெரியுமா !!

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே நம் மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

 

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

 

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.

 

தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

 

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் :

 

பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.

 

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. 

 

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

 

சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். 

 

ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

 

ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

 

ஓம் மித்ராய நமஹ...... சிறந்த நண்பன்

 

ஓம் ரவயே நமஹ...... போற்றுதலுக்குரியவன்

 

ஓம் சூர்யாய நமஹ...... ஊக்கம் அளிப்பவன்

 

ஓம் பானவே நமஹ...... அழகூட்டுபவன்

 

ஓம் ககாய நமஹ...... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

 

ஓம் பூஷ்ணே நமஹ...... புத்துணர்ச்சி தருபவன்

 

ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ...... ஆற்றல் அளிப்பவன்

 

ஓம் மரீசயே நமஹ...... நோய்களை அழிப்பவன்

 

ஓம் ஆதித்யாய நமஹ...... கவர்ந்திழுப்பவன்

 

ஓம் சவித்ரே நமஹ...... சிருஷ்டிப்பவன்

 

ஓம் அர்க்காய நமஹ...... வணக்கத்திற்கு உரியவன்

 

ஓம் பாஸ்கராய நமஹ...... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

 

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும். இனி தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.... சூரிய பகவான் அருளால் ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்....

by Swathi   on 20 Jan 2014  2 Comments
Tags: Surya Namaskar   Namaskar   Benefits of Surya Namaskar   Surya Namaskar Methods   Surya Namaskar Tamil   Sooriya Namaskaram   சூரிய நமஸ்காரம்  
 தொடர்புடையவை-Related Articles
காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு தெரியுமா !! காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு தெரியுமா !!
கருத்துகள்
04-Apr-2017 22:50:59 Shanmuganandam said : Report Abuse
Nalla pathivu.nanmuyartchi. Nallam tharum namashkar.
 
04-Apr-2017 22:50:57 Shanmuganandam said : Report Abuse
Nalla pathivu.nanmuyartchi. Nallam tharum namashkar.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.