LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கமலஹாசனுக்கு ஹன்றி லாங்லாயிஸ் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவைத் தொடர்ந்து பாரிஸ் தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது.

இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் கலைஞர் நான் என்பதால்  பல கலைஞர்களின் சார்பில் தான் இந்த விருதை பெற்றுக்கொள்கிறேன்.  இந்த விருதை பெற நான் தகுதியுள்ளவனா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விருது எனக்கும் கிடைத்தது மகிழ்ச்சியாகவும், வியப்பாக இருக்கிறது.  என்னுடைய படங்களில் பிரெஞ்சு சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கும். இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை, மற்றவர்களுக்கு விருது கிடைத்தது வாழ்த்துக்கள்.

மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கக் காத்திருப்பதாக முன்னரே சொல்லிருக்கிறீர்கள். அது எப்போது சாத்தியமாகும்?

மணிரத்னத்துடன் எப்போது மீண்டும் இணைய போகிறேன் என்று தெரியவில்லை, அவருக்கு நல்ல நடிகர்களும், நல்ல கதைகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நானும், அவரும் படங்கள் இயக்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறோம். காலம் வரும்போது கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைவோம்.

ரஜினிகாந்தும் நீங்களும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா?

நானும் ரஜினியும் இணைந்து நடிக்க சம்மதம் சொல்லி எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் பிறகு படம் எடுக்க பணம் இருக்காது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் சேர்ந்து நடிக்க முடியவில்லை, நாங்கள் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கியதே இந்த காரணத்திற்காகத்தான் என்றவர், மருதநாயகம் படம் பற்றி பேசும்போது, பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அமெரிக்காவில் கூட நிறைய பேர் கேட்க தொடங்கிவிட்டார்கள். இத்தனை காலம் பொறுமையாக இருந்துவிட்டேன், இன்னும் சிறிது காலம் நான் பொறுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல.

உங்கள் மகளுடன் நடிக்கும் படம் குறித்து :

என்னுடைய அடுத்தப்படம் த்ரில்லர் ப்ளஸ் காமெடி படமாக இருக்கும். இது நான் என் மகள் ஸ்ருதியுடன் நடிக்கும் முதல்படமாகும் என்று கூறியுள்ளார்
 

by CinemaNews   on 04 Apr 2016  0 Comments
Tags: Rajinikanth   Kamal Hassan   Rajini Kamal   ரஜினி   கமல் ஹாசன்   ரஜினி கமல்     
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
ஜாக்கிஜான், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் !! ஜாக்கிஜான், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் !!
ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!! ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!!
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!! ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.