வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் கவுதம் மேனன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய், விவேக் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நேற்று முன் தினம் படத்தின் ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஜனவரி 15 என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் நேற்று ஜனவரி 29 என மாற்றப்பட்டுள்ளது. படத்தில் இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதும் ,மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் வேலைகளும் சற்று மீதம் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேல் படத்தின் இந்த வேலைகள் அனைத்தும் முடிந்து இனிதான் சென்சார் பார்வைக்கு செல்லவிருக்கிறது. எனவே கண்டிப்பாக இதற்கு இன்னும் சில நாட்கள் தேவை என்பதாலும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|