LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

விண்டாஷ் - 107

பள்ளிக்கூடம் விட்டு வந்த மணிமேகலை கை, முகம் கழுவ குழாயை நோக்கி நடந்தாள். "ஐயோ.. இதென்ன?''  குழாய் அருகே கண்ட பொருள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

வட்ட வடிவில் ஒரு குட்டி விமானம்!

 

மேகலை அதன் அருகே செல்லவும் அதோட கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

 

அதுக்குள்ளே யாராவது இருக்கிறர்களா என்று எட்டிப் பார்த்தால். யாரும் இல்லை. உள்ளே தான் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்து அந்த குட்டி விமானத்துக்குள்ளே ஏறினாள்.

 

" டப்''  சத்தத்தோட அதோட கதவு தானே மூடி விட்டது. கதவு மூடி விட்டதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சின்னச் சின்ன விளக்குகள் மின்னி மின்னி மறைய, வட்ட வடிவில் நாற்காலி ஒன்று அவளை நோக்கி நகர்ந்து வந்தது. அவளருகே வந்ததும் அது நின்றது.

 

மேகலை துணிச்சலோடு அதில் ஏறி உட்காந்தாள். அவ்வளவுதான் அது அவளைச் சுமந்துகிட்டு மின்னும் பொத்தான்கள் நிறைஞ்சிருக்கிற மேசை அருகே போய் நின்றது.

 

ஒரு பச்சை வண்ண பொத்தான் விட்டு விட்டு எரிந்து கொண்டிருப்பதை  பார்த்த மேகலை அதில் தன் விரலை வைத்தாள். அவ்வளவுதான் "பீப் பீப்...''ங்கற மாதிரி வினோதமான சத்தம் கேட்டது. மேசைக்கு முன்னால் தெரிந்த திரையில் பல நிற கோடுகள் கோலங்கள் வரைந்தது. கடைசியிலெ "தமிழில் சிந்திக்கும் பூமியின் ஊயிரே வருக'' அப்படீங்கற வாக்கியம் மின்னி மின்னி வந்து பின்னே நிலைத்து  நின்றது.

 

மறுபடியும் அந்தப் பச்சை நிற பொத்தான் மின்னத் தொடங்கியது.

 

"பயப்படாதே... நீ விண்டாஷ் - 107 என்ற விண்ணுலகிற்குச் செல்லப் போகிறாய்''  என்ற வாக்கியம் திரையில் தோன்றி மறைந்தது.

 

அவள் அவ்வாக்கியத்தை வாசித்து முடித்ததும் "விண்டாஷ் - 107 என்பது எங்கள் நாட்டின் பெயர்'' அப்படீங்கற வாக்கியம் திரையில் வந்தது.. அதை வாசித்த மேகலைக்கு ஒரே ஆச்சரியம். நான் நினைக்கிறது  எப்படி இந்த விமானத்திற்குத் தெரிகிறது?

 

"பயப்படாதே! நான் எங்கள் நாட்டிலுள்ள மிகச் சிறந்த திறன் பெற்ற கணினிகளில் ஒன்று'' என்ற வாக்கியம் தோன்றியது.

 

மேகலை சட்டென பொத்தானிலிருந்து கையை எடுத்தாள். உடனே திரையும் அணைந்தது.

 

" ஓ. ! இந்தப் பொத்தானில் கையை வைச்சா மட்டும்தான் இக்கணினியால் நான் நினைக்கிறதை தெரிஞ்சுக்க முடியும் என்று  தெரிஞ்சுகிட்டாள். அவளுக்குக் கொஞ்சம் துணிச்சல் வந்தது..

 

அவள் மெல்ல வெளியே பார்த்தாள். சில ஒளிக்கோளங்கள் பெரிதாகத் தெரிந்து பிறகு சிறியதாகி சிறியதாகி மறைஞ்சு போனது.

 

மேகலை நாற்காலியைக் குட்டி விமானத்தின் ஜன்னலுக்கு அருகே கொண்டு போனாள். கீழே ஒரு ஒளி கோளம் சிறிதாகி கொண்டே  இருந்தது. "நான் ரொம்ப வேகமாக மேல போய் கொண்டிருக்கிறேன் என்று ''  மனதில் நினைத்துக்கொண்டாள்.

.

இந்த விமானத்தின் வேகம் எத்தனை இருக்கும் என்று நினைத்து பச்சைப் பொத்தானில் விரலை வைத்தாள்.

 

"வினாடிக்கு 1800 கிலோ மீட்டர்'' திரை பதில் சொல்லியது..

 

சற்று நேரம் இந்தக் கணினியுடன் விளையாடுவோம் என்று  முடிவு செய்தாள் மணிமேகலை.. அப்போ சட்டென்று அவளுக்கு அந்த ஞாபகம் வந்தது. தன் பாவாடையிலிருந்த பையைத் தொட்டுப்பாத்துகிட்டாள். பாவாடைப் பையில அந்தப் பொட்டலம் பத்திரமாக இருந்தது.

 

மேகலை பாவாடைப் பைக்குள் கையை விட்டு அந்த பொட்டலத்தை எடுத்தாள்.  உடனே கணினியிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்டது. சட் என்று கணினித்திரை நீலநிறமானது. அப்புறம் சிவப்பு நிறத்தில் "அபாயம்''  ங்கற வார்த்தை வந்து வந்து போனது. அதுமட்டுமல்ல அந்தக் குட்டி விமானமே இப்படியும் அப்படியும் ஆடத் தொடங்கியது..

 

மணிமேகலை கையிலுள்ள பொருளைப் பொட்டலமாக்கி மறுபடியும் பாவாடைப் பைக்குள் வைத்தாள்.

 

"எங்கிட்ட இருக்கிற இந்தப் பொருளைப் பார்த்து இந்த கணினியே பயப்படுகிறது. அதனால் நான் பயப்படத்தேவையில்லை. தேவைப்படும்போது இந்தப் பொருளை எடுக்கலாம்'' என்று அவளுக்கு நல்ல தைரியம் வந்தது.

.

விண்டாஷ் - 107 க்கு இன்னும் எத்தனை நேரம் பயணம் இருக்கிறதோ என்று நினைத்து பொத்தானில் கையை வைக்க "3 நிமிடம், 25 நொடி 32 குறுநொடி'' என்கின்ற தகவல் கணினித் திரையில் வந்து நின்றது.

 

விமானத்தின் முன்னால் ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் போலத் தெரிந்த ஒரு கோளம் பந்துபோல் பெரிதகிட்டே வந்தது. கொஞ்ச நேரத்திக்குள்ளே அந்த ஒளிக்கோளத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு பிரகாசமான ஒளி கண்ணைக் கூசியது.

 

கண்ணைக் கசக்காமல் சற்று நேரம் அந்த ஒளிக்கோளத்தையே உத்துப் பார்க்க வெளிச்சம் கண்ணுக்குப் பழகிப் போய் அந்த கோளத்தை தெளிவாகப் பாக்க முடிந்தது.

 

மேகலை பயணிக்கும் குட்டி விமானத்தின் வேகம் குறையத் தொடங்கியது. அந்த ஒளிக்கோளத்தைச் சுற்றி வேறு சில குட்டி விமானங்களும் பறந்திட்டிருந்தது.

 

மேகலையின் விமானம் இப்போ அசையாமல் நின்றது. விமானத்தைச் சுற்றி வெள்ளைப் புகை பரவியது.. இரண்டு இரும்புக் கைகள் நீண்டு வந்து அந்த விமானத்தை அப்படியே இழுத்து ஒரு திட்டின் மேல் வைத்தது. மேகலைக்கு கொஞ்சம் பயம் வந்தது. . இருந்தாலும் அதை வெளிக்காட்டாம சமாளித்தாள். விமானத்தோடு கதவுகள் தானா திறந்தது. அந்த அசையும் வட்ட நாற்காலி அவளையும் சுமந்துகிட்டு அந்தத் திட்டிற்குப்போனது.

 

அவள் சுற்றும்முற்றும் பார்த்தாள். இவங்க எல்லாம் யார் மனிதர்களா இல்லை யந்திரங்களா..? எல்லாரும் கண்ணாடியால் செய்தது மாதிரி பள பள வென மின்னுகிற உடைகளை போட்டிருந்தாங்க. அவசர அவசரமாக இங்கும் அங்கும் நடந்துகிட்டிருந்தாங்க.

 

அதில் ஒருவர் மேகலையோட அருகே வந்தார். அவரோட ஆள்காட்டி விரலை அவளுக்கு நேராக நீட்டினார். அவ்விரலில்லிருந்து ஒளிக்கற்றைகள் பாய்ந்து வந்து அவளைச் சுற்றி ஒரு கண்ணாடி ஆடையை உருவாக்கியது.

 

மேகலை தலையைத் திருப்பி விந்தை உலகான விண்டாஷ் - 107 இல் என்னென்ன நடக்குதுண்ணு கவனித்தால்.

 

அவளை ஏற்றி வந்தது போல் நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறங்கியது. வேறு சில விமானங்கள் கிளம்பிப் போகிறது. ஆனால் துளிச் சத்தம் கூட இல்லை. அந்த விமானங்களில கதவு மேற்பகுதியில் அமைந்திருந்தது. அதுக்குள்ளே கண்ணாடி மனிதர்களேட தலைகள் தெரிந்தது.

.

விண்டாஷ் 107 - ன் ஆகாயமும் பூமியின் ஆகாயம் போலத்தான் இருந்தது. ஆனால் சிவப்பு நிறக் கதிர்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்துகிட்டே இருந்தது.. இவை என்னவாக இருக்கும் என்று கூர்ந்து பார்ப்பதர்க்குள்ளே மஞ்சள் வெள்ளை நிற ஒளிக்கதிர்களும் சிவப்புக்கதிர்களோடு சேந்தது.

 

"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கும்போது இது மாதிரி லேசர் கதிர்களால் உருவங்கள் அமைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப்போல் ஏதாவது இருக்கலாம்ணு நினைத்தால் மணிமேகலை.

 

அதுக்குள்ளே அந்த ஒளிக்கதிர்கள் வானத்தில் "பூமியின் ஊயிரே வருக வருக...'' என்ற நடமாடும் எழுத்துகளை உருவாக்கியது. மேகலைக்கு பெருமிதமாக இருந்தது. இது போன்ற வரவேற்பு வேறு யாருக்குமே கிடைக்காது என்று நினைத்தாள்.

 

மேற்பகுதி திறந்திருந்த ஒரு விமானம் அவளுக்கு அருகே அமைதியாக வந்து நின்றது. மேகலை அதில் ஏறினாள். அது அவளையும் ஏற்றிக்கொண்டு கொஞ்ச தூரம் பறந்து நீலநிற புகைக்குள் நுழைந்தது. புகைக்குள்ளே தெரிந்த கதவின் அருகே போய் அந்த விமானம் நின்றது மணிமேகலை கதவை திறப்பதற்குள் கதவு தானாகத் திறந்தது.

 

அவள் உள்ளே நுழைந்ததும் அந்தக் கதவு தானாக மூடியது. அறைக்குள் கண்ணாடியால் செய்த கீரிடம் அணிந்த ஒரு கண்ணாடி மனிதர் இருந்தார்.. அவர் விண்டாஷ் - 107வின் தலைவர்.

 

மேகலையைக் கண்டதும் அவர் ஒரு நாற்காலியை உற்று பார்க்க அது அவளை பார்த்து நகர்ந்து வந்தது. அதில் அவள் உக்கார அது நகர்ந்து நகர்ந்து அவர் முன்னாடி போய் நின்றது.

 

கண்ணாடி கிரீடம் அணிந்த தலைவர் மேகலையைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். "நீங்கள்... பூமியிலுள்ள மக்கள் பல தீய செயல்களைச் செய்யுறீங்க.

 

அதை பூமியிலுள்ள மக்களுக்கு எடுத்துச்சொல்ல நான் உன்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நீங்கள் நடத்தும் அணுச்சோதனைகள், வெடிக்கும் அணுகுண்டுகள், உங்கள் குளிர் பதனப்பெட்டிகள், எரிக்கும் பிளாஸ்டிக்குகள் இவை எத்தனை எத்தனை விஷ வாயுக்களை வெளியேவிடுது தெரியுமா? அவ்வாயுக்கள் ஓசோன் கவசத்தைக் கிழிக்குது. அந்தக் கவசம்தான் எங்கள் நாட்டிற்குத் தேவையான மின்காந்த அலைகளைக் காப்பாற்றுகிறது. எங்களுக்கு பாதுகாப்புக் கவசமா இருக்கிற மின் காந்தக் கவசம் பலவீனமடைந்து வருகிறது. அதனால் எங்கள் நாடு மெல்ல மெல்ல உங்கள் பூமியை நோக்கி இரங்கி கொண்டிருக்கிறது. இரண்டும் மோதிக்கிட்டா அவ்வளவுதான் இரண்டு  உலகமும் உடைந்து சுக்கு நூறாகிடும்.

 

அதனாலே உனக்கு நான் ஒரு குறுந்தகடு தர்றேன். அதை உன்னோட கணினியில் செலுத்தி இணைய தளம் மூலம் உலகிலுள்ள எல்லோருக்கும் காட்டு. வரப்போகும் ஆபத்து பற்றி எல்லோரும் எச்சரிக்கையா இருக்கட்டும்.'' என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த அலமாரியைப் பார்த்தார். அதிலிருந்து ஒரு குறுந்தகடு பறந்து வந்து அவர் முன்னால் மெல்ல இறங்கியது.

 

"நான் உலகத்தைக் காப்பாற்ற போகிறேன். விண்டாஷையும் இங்குள்ள கண்ணாடி மனிதர்களையும் காப்பாற்ற போகிறேன். "சந்தோஷத்தால் அவளோட மனசு துள்ளிக் குதித்தது. அந்தக் குறுந்தகடை எடுத்தவள் அசைந்து வரும் நாற்காலியைக் கவனிக்காமல் அதன் மேல் மோதி விட்டால். "ஐயோ" என்று கத்திகிட்டே தடுமாறி கீழே விழுந்தாள்.

 

அப்போ மேகலையோட அம்மா ஓடி வந்தாங்க. கட்டிலிலிருந்து உருண்டு விழுந்த மேகலையை தூக்கினாங்க.. "ஏம்மா... ஏதாவது கனவு கண்டயாணு கேட்டாங்க''  மேகலை திரு திருணு முழிச்சா. சுத்தும் முத்தும் பாத்தாள்.

 

"ஆமாம் அம்மா...''  என்று சொல்லிட்டு மெல்ல சிரித்தாள். அவளுக்கு எல்லாம் புரிந்தது. மெல்ல எழுந்து . பாவாடைப் பையைத் தொட்டுப் பார்த்தவள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.

 

பள்ளிக்கூடத்தில் தோழிகளோடு கொத்தாங்கல் விளையாடியது நினைவுக்கு வந்தது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கட்டிலிலிருந்து விழுந்த மேகலை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறதை பார்த்து மேகலையோட அம்மா ஆச்சரியப்பட்டு அவளையே பார்த்துகிட்டிருந்தாங்க.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.