LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !!

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக இ-மெயில் அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். 


நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், இது தொடர்பான புகார்களை பெற உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளார். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த குழுவுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த குறை தீர்ப்பு மையம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. 


பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களது புகார்களை இந்த குழுவுக்கு gupta.rachna@indianjudiciary.gov.in என்ற ‘இ-மெயில்’ முகவரிக்கும் அல்லது பதிவு தபால், விரைவு தபால், கொரியர் மூலமாகவும் புகார் அளிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும்புபவர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்த குழுவின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 


இதன் மூலம் பெறப்படும் பாலியல் புகார்கள் மீது உடனடியாக ரகசியாகமாகவும், நியாயமான முறையிலும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் இந்த நடவடிக்கைக்கு சமூக நல அமைப்புகள் பல வரவேற்பு தெரிவித்துள்ளன.

Women can post complaints to Supreme Court sexual harassment cell

 

The committee set up in the Supreme Court to deal with instances of sexual harassment within its precincts has decided that aggrieved women can send their complaints to it by post or e-mail.

The committee set up in the Supreme Court to deal with instances of sexual harassment within its precincts has decided that aggrieved women can send their complaints to it by post or e-mail.

 

by Swathi   on 19 Feb 2014  1 Comments
Tags: பாலியல் குற்றங்கள்   உச்சநீதி மன்றம்   சதாசிவம்   Sexual Harassment Cell   SC        
 தொடர்புடையவை-Related Articles
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !! பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !! பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!
மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !! மணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் !!
கருத்துகள்
20-Feb-2014 21:32:44 amar said : Report Abuse
இத ந வேல் கம் பண்ற
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.