வாஷிங்டன் : நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில், முதல் முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் எம்.பி.யாக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனுடன் 50 மாநிலங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹவாய் நகரில் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் துளசி கபார்ட். வயது 31. ஹவாய் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கட்சி தேர்தலில் போட்டியிட்டார். துளசியை எதிர்த்து முஃபி ஹன்னமென் என்பவர் நின்றார். முடிவில் அதிக வாக்குகள் பெற்று துளசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
|