அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இவர் சி.பி.எஸ். நியூஸ் என்ற ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சிரியா நாடு ரசாயன ஆயுதங்களை பரப்புவதை தடுக்க தேவைப்பட்டால் அமெரிக்க படைகளை அனுப்புவேன் என்று கூறினார். தீவிரவாதிகளின் கைகளில் இத்தகைய ஆயுதங்கள் கிடைத்து அழிவினை ஏற்படுத்துவதற்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும் என பேட்டியளித்தார்.
|