வாஷிங்டன் : நிலவில் கால் பதித்த முதல் மனிதனான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் மூலம், கடந்த 1969ம் ஆண்டு நிலவுக்கு சென்றவர் ஆவார், 82 வயதான நீல் ஆம்ஸ்ட்ராங் "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இரத்தக் குழாய்களில் நான்கு இடங்களில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதால், கடந்த 7ம் தேதி சின்சினாட்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|