லண்டன் : பிரிட்டனில் வசிக்கும் 15 மெகா பணக்காரர்களின் சொத்து மதிப்பில் இந்தியர்கள் 22 %-த்தை கொண்டுள்ளனர். ரஷ்யர்கள் முதலிடத்தில் பிடித்துள்ளனர். சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள வெல்த் எக்ஸ் குழுமம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் முதல் 15 பணக்காரர்களின் பட்டியலை இந்த குழுமம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியரான இரும்பு தொழில் மன்னன் ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் 1,580 கோடி டாலர் செல்வ வளம் கொண்டவராக இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.
|