வாஷிங்டன் : மும்பையில் பிறந்து அமெரிக்காவில் வாழும் தினேஷ் டிசோசா ஒபாமாவுக்கு எதிராக தயாரித்த குறும்படம், அமெரிக்காவையே கலக்குகிறது. தினேஷ் டிசோசா தயாரித்துள்ள ‘2016 - ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற குறும்படம் சென்ற வாரம் குறைந்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த குறும்படத்தில், பராக் ஒபாமா மீண்டும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், மரணங்களையும், கடனையும் அமெரிக்கா தாங்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த குறும்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|