வாஷிங்டன், ஆகஸ்ட் 16 : அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விண்வெளியில் தங்கி உள்ள வீரர்கள் விண்வெளியில் நடந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பழுது நீக்கும் பணிகளை செய்ய உள்ளனர். இதற்காக வருகிற 20-ந் தேதியும் 30-ந் தேதியும் விண்வெளியில் நடந்து பழுது நீக்கும் பணிகளை செய்ய உள்ளனர். 20-ந் தேதி விண்வெளி வீரர்கள் கென்னடி பதல்கா, யூரி, மலன்சென்கோ ஆகியோர் விண்வெளியில் நடந்து சில பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மைக்ரோ மீட்டரின் கருவியை பொறுத்துதல், பாதுகாப்பு கவசத்தை அணிவித்தல், சிறிய ரக செயற்கோளை பொறுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். 2-வது கட்ட பணி 30-ந் தேதி நடக்கவிருக்கிறது.
|