LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு

கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு 
சியாம் ரீப் கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19, 20-ல் மிகச்சிறப்பாக  நடைபெற்றது. உலகிலேயே மிகப் பெரிய  வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில்  "உலகத் தமிழர் மாநாடு" நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.
தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது. 
பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்.
தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் "Global organization for Tamil youth" போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் 'தமிழர் களறி" எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.

சியாம் ரீப் கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19, 20-ல் மிகச்சிறப்பாக  நடைபெற்றது. உலகிலேயே மிகப் பெரிய  வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில்  "உலகத் தமிழர் மாநாடு" நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.

தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது. 

பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்.

தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் "Global organization for Tamil youth" போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் 'தமிழர் களறி" எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. 

by Swathi   on 23 May 2018  7 Comments
Tags: tamil conference   உலகத் தமிழர் மாநாடு   கம்போடியா              
 தொடர்புடையவை-Related Articles
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு
அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !! அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !!
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
வாசிங்டனில் புறநானூறு வாசிங்டனில் புறநானூறு
கருத்துகள்
30-May-2018 09:27:01 கலைச்செல்வன் said : Report Abuse
நான் மிகவும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மதிப்பவன் ,எனவே என்றும் அழியாமல் பழமையான மொழி எங்கள் தமிழ் மொழி ,எண்களின் தமிழ் கோவில்களில் சிறந்து விளங்கும் சத்திய கோவில்கள் எண்களின் தமிழ் பண்டைய கால விளையாட்டு,பண்பாடு,காலை மாற்றும் ஓவியம் அனைத்திலும் சிறந்து விளங்கும் பழமையான மொழி என்பதிலும் ,தமிழ் கலாச்சாரம் ,உடை ,விவசாயம் ,எண்களின் உன்னோர்களின் வாழ்கை வழிபாடுகள் எல்லாமே தமிழன் என்பதில் திமிரும்,பெருமிதமும் பெறுவேன் ,இபொழுது நான் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன் அனைவர்க்கும் நன்றி வணக்கம் .
 
25-May-2018 16:42:48 ந.ஜெயபாலன் said : Report Abuse
அருமையான தகவல்
 
25-May-2018 08:38:26 rangarajan said : Report Abuse
இந்த நல்ல நிகஹ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.கம்போடியா வில் உள்ள தமிழ் நண்பர்களை தொடர்பு கொள்ள ஆசை படுகிறேன் நன்றி
 
25-May-2018 05:26:13 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.உலகெங்கிலுமுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் இந்த ' உலக தமிழர் மாநாடு' வரும் ஆண்டுகளில் தொடரவும் விரும்புகிறேன்.மேற்காக இருந்தாலும் கிழக்காக இருந்தாலும் தமிழன் ஒரு போதும் தம் பண்பாடு, கலாசாரத்தை இழக்கமாட்டான். நன்றி
 
25-May-2018 03:58:32 நகென்றேன் said : Report Abuse
அட...கம்போடியாவிலும் தமிழர்கள் இருக்கிறார்கலே.
 
25-May-2018 00:38:36 Shan Nalliah said : Report Abuse
World Tamil Bank or Jaffna Bank shd be started towards savings,investments, insurance & reasonable loans to poor!
 
24-May-2018 15:53:53 'பசி'பரமசிவம் said : Report Abuse
மிக்க நன்றிங்க.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.