LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நீட் தேர்வு எதிர்ப்பு, ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு !

வணக்கம்! ‘நீட்’ நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டுக்குப் பல்வேறு வகைகளிலும் மாபெரும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கற்றறிந்த அறிஞர்கள் பலரும் தெளிவாக விளக்கியுள்ளனர். தமிழ் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் ‘நீட்’டை எதிர்க்கின்றனர். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை மேற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தமிழ் நாட்டு மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒருமனதாக நிராகரித்துள்ளனர். நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டு அரசும், தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இதைத் தடுக்க வேண்டும். நீட் தேர்வை தடுக்கத்தவறினால் வருங்கால தமிழர் தலைமுறைகளின் தீராப்பழிச்சொல்லுக்கு ஆளாவோம். ஆகவே, காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ் நாட்டை இப் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழர்களின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை விளக்குவதற்காக உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக சென்னை ஊடகவியலாளர் மன்றத்தில்
திரு. ஆழி செந்தில்நாதன் (தன்னாட்சித் தமிழகம்)
ஒருங்கிணைப்பில் ஊடகச் சந்திப்பு நவம்பர் 09 ஆம் நாள், காலை 11 மணியளவில் நடைபெறும். அனைத்து ஊடகங்களையும் அழைக்கின்றோம். நீட் தேர்வுக்கு எதிரான ஆவணம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும், இயக்கங்களையும் இவ்வூடகச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தன்முனைப்பின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க தாங்களோ, தங்களின் பேராளரோ தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

by Swathi   on 08 Nov 2017  0 Comments
Tags: Tamil Nadu Hates NEET   NEET   NEET Exam   நீட் தேர்வு           
 தொடர்புடையவை-Related Articles
கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
நீட் தேர்வு எதிர்ப்பு, ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு ! நீட் தேர்வு எதிர்ப்பு, ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.