LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத் தமிழிசை மாநாடு- 2019 பணிகள் தொடங்கியது

உலகத் தமிழிசை மாநாடு - 2019

நாள் : 25.04.2019 - 26.04.2019

இடம் : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், கானல் வரி கலை இலக்கிய மையம், கற்க அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் முதல் உலகத் தமிழிசை மாநாடு.

பொருண்மைகள்:

👉தமிழிசை அரங்கேற்றம் :
மாநாட்டில் அனைத்து வகையான தமிழிசைக் கருவிகளையும் கலைஞர்களையும் கொண்டு இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்தல்,

👉 தமிழிசைக் கருவிகள் காட்சியரங்கம்: மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழிசைக் கருவிகள் மற்றும் தமிழகப் பழங்குடிகளின் இசைக் கருவிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துதல்,

👉ஆய்வரங்கம்: தமிழிசையின் தொன்மை, வகைப்பாடு, சந்தம், இசை மருத்துவம், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, தமிழிசை நாடகம், அயல்நாடுகளில் தமிழிசை, மக்களிசை, தமிழிசைக் கல்வி, இலக்கியத்தில் இசை, தமிழிசை ஆய்வுகள், தமிழிசை ஆளுமைகள், இசைத் தூண்கள், கருவி வகைகள், கருவிகள் செய்முறை, தமிழிசைக் கலைஞர்களின் வாழ்வியல் , தமிழகப் பழங்குடிகளின் இசை, தமிழிசையும் பிற இசைகளும் ஆகியன குறித்து ஆய்வுரை நிகழ்த்துதல்,

👉தமிழிசைக் கலைஞர்களுக்குத் தமிழிசைச் செம்மல் விருது வழங்குதல்,

👉ஆய்வுக் கட்டுரைகள், இசை நிகழ்ச்சி அரங்கேற்ற விருபப் படிவம், விருதுக்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 25.03.2019

ஒருங்கிணைப்புக் குழு :

முனைவர் கு. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
அயல்நாட்டுத் தமிழர் புலம்- உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
கைபேசி: +91-9500106269

முனைவர் இரா.மாதவி
துறைத் தலைவர்
இசைத் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
கைபேசி: +91-9442318569

முனைவர் இரத்தின. புகழேந்தி
கானல் வரி கலை இலக்கிய மையம்.
கைபேசி:+91-9944852295

 

23.01.2019: உலகத் தமிழிசை மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 23.01.2019 புதன் அன்று தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உலகத் தமிழிசை மாநாடு 25.04.2019- 26.04.2019 ஆகிய நாட்களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம், தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் முனைவர் இரா. மாதவி, கானல்வரி கலை இலக்கிய மன்றத்தின் செயலர் முனைவர் இரத்தின. புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு பல்கலைக்கழகங்கள், தமிழிசை அறிஞர்களை சந்தித்து இந்த நிகழ்ச்சியை செம்மையாக திட்டமிட்டு வருகின்றனர். 

 

23.01.2019: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முனைவர் தியாகராசன், அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை, முனைவர் விஜய இராஜேஸ்வரி, மொழிபெயர்ப்புத் துறை, முனைவர் வெற்றிச்செல்வன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை ஆகியோரை முனைவர் கு. சிதம்பரம், முனைவர் இரத்தின புகழேந்தி ஆகியோர் சந்தித்து தமிழில் ஆய்வுகள் குறித்து கலந்தாய்வு செய்தனர்.

 

28.01.2019 சென்னை, தமிழ் இசைக் கல்லூரியின் முதல்வர் இசைக்கலைமணி முனைவர் வே.வெ.மீனாட்சி அவர்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் சந்தித்து உலகத் தமிழிசை மாநாடு- 2019 குறித்து கலந்தாய்வு செய்தார்.

 

1/31/2019: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் உலகத்தமிழிசை மாநாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இசைத்துறைத் தலைவர் முனைவர் அருட்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இசைத்துறை பேராசிரியர் முனைவர் குமார். கானல்வரி கலை இலக்கிய இயக்கத்தின் செயலாளர் முனைவர் இரத்தின புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதம் தேர்வுக் காலமாக இருப்பதால் ஆகஸ்டு மாதத்தில் மாநாடு நடத்துவது சிறப்பாக அமையும் என ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தேதிகளை, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரோடு கலந்து ஆலோசித்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக்கழக இசைத்துறை, இம்மாநாட்டில் கலந்து கொள்வது குழுவினருக்கு ஊக்கமளிக்கிறது.

by Swathi   on 30 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.