LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

சர்வதேச காச நோய் தினம் - மார்ச் 24

உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்நோய் தாக்குதலினால் 50 லட்சம் பேர் இறந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நோயின் தன்மை உணர்ந்து சிகிச்சை பெறாதது தான்.


நகம், முடியைத் தவிர எல்லா இடத்திலும் டி.பி. கிருமி தாக்கும். ஆனால், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. காச நோய்க் கிருமியானது இருமல், தும்மல், சுவாசம், பேசுதல் மூலமாகப் பரவுகிறது. எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு நோயை விரைவாக குணப்படுத்த முடியும். 


காசநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. இது ஒரு தொற்றுநோய். இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றில் இருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது, மாலையில் காய்ச்சல், மூன்று வாரங்களுக்கு மேலாக இருமல், ரத்தம் வெளியேறுதல், எடை குறைவு, பசியின்மை, இரவில் வியர்த்தல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகள்.


முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான உணவு, நல்ல காற்றோட்ட வசதி, சுத்தமான இருப்பிடம் போன்றவற்றால் இந்த நோயை முற்றிலும் தடுக்கலாம் என சொல்கிறது மருத்துவ துறை.


காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


வரலாறு :


மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.


1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

by Swathi   on 02 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.