LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

யாரும் வாங்காத கூடு

பழைய தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்குவதர்க்கும் , விற்ப்பதற்கும் அந்தத் தெரு இருந்தது. பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள், குப்பிகள், தகரம்.. அப்படீண்ணு அந்தத் தெரு முழுக்க பழைய பொருட்கள் நிறைந்திருக்கும்.

 

ஆனா இக்கடைகளுக்கு இடையில் வேறொரு கடை இருந்தது. அது ரொம்ப அழகான கடை. அந்தக் கடையில் எங்கு பார்த்தாலும் கூடுகள் தொங்கும். அங்கங்க கூண்டுகள் இருக்கும். கூடுகளுக்குள்ள பச்சைக்கிளிகள் மைனா, வாத்து, கோழி புறா போன்ற பறவைகள் இருக்கும் கூண்டுகளுக்குள்ளே நாய், முயல், பூனை, போன்ற வளர்ப்பு விலங்குகள் இருக்கும். அந்தக் கடைகளோட எதிரில்தான் என்னோட வீடு இருந்தது.

 

நான் ஜன்னல் வழியா எப்போதும் அந்தக் கடையைத்தான் பார்த்திட்டிருப்பேன்.

 

என் ஜன்னலிருந்து பார்த்தால் வீட்டு வாசல். வாசலுக்கு அடுத்த சாலை. சாலைக்கு அப்புறம் இந்தக் கடை.

 

எப்போது பார்த்தாலும் பறவைகளோடு கீச் கீச் ஓலி கேட்கலாம். கூடவே நாய்களின் குறைக்கும் சத்தம் கேட்கலாம். உடம்பெல்லாம் புசுபுசுண்ணு முடியிருக்கிற நாய்கள்லிருந்து நம் வீடுகளைச் சாதாரணமாகப் பார்க்கிற நாய் வரைக்கும். உயரம் குறைவா ஆனா நீளமா இருக்கிற நாயிலிருந்து கன்றுக்குட்டி மாதிரி பெரிய உருவத்தோடு இருக்கிற நாய்கள் வரைக்கும் அந்தக் கடையில் இருக்கு.

 

இந்தக் கடைக்காரர்  எங்கிருந்து புடிச்சிட்டு வர்றாருணு நான் பலதடவை யோசிச்சிருக்கேன். நிறையப் பேர் காட்டிலிருந்து புடிச்சிட்டு வந்து இந்தக் கடையில் கொண்டுவந்து கொடுக்கிறாங்க. அதுமாதிரி வீட்டில் நாய் குட்டி போட்டதுனா அதுகளைப் பார்த்து வளர்க்கிறது கஷ்டம்ணு இந்தக் கடையில் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. பெரிய பெரிய காரில் வர்றவங்க அதை வாங்கிட்டுபோவாங்க.

 

இந்தக் கடையில் இருக்கிற விலங்குகள் பறவைகளைப் பார்த்திட்டே இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுது போக்கு. கடையில் எத்தனை கூண்டு தொங்குது? ஒவ்வொரு கூண்டிலையும் எந்தெந்த பறவை இருக்கு எந்தெந்த விலங்குகள் இருக்குண்ணு எனக்குத் தெளிவாகத் தெரியும். பக்கத்துப் பக்கத்து கூண்டுகளில் இருக்கிற பறவைகள் தங்களுக்குப் பேசிக்கும். ஒரு பறவை முதலில் கத்தும். அதைக்கேட்டு அடுத்தது கத்தும். அந்த ரெண்டும் கத்துவதை கவனமாக் கேட்டால் அவங்க பேசிக்கறாங்கண்ணு நமக்கு நல்லா புரிஞ்சுக்கலாம்.

 

இன்னும் நல்லாக் கவனிச்சுக் கேட்ட அவங்க எதைப் பத்திப் பேசறாங்கண்ணுகூட தெரிஞ்சுக்கலாமோண்ணு எனக்குத் தோணும். அதுமாதிரித்தான் விலங்குகளோடு கூண்டுலயும் நடக்கும். விலங்குகளோட கூண்டுல மூணு நாலு முயலுகளோ அல்லது நாய்க்குட்டிகளோ ஒண்ணா இருக்கும். அவங்க எவ்வளவு நேரம்தான் கூண்டுக்குள்ள சும்மா இருக்குங்க. அப்பப்ப விளையாடத் தொடங்கும் அதைப் பார்த்திட்டேயிருந்தால் சிரிப்பு வரும்.

 

சில நேரங்களில் பக்கத்து பக்கத்து கூடுகளிருக்கிற பறவைகளில் உன்னை யாராவது வாங்கிட்டுப் போயிருவாங்க. அப்ப கடையில் இருக்கிற அந்த இன்னொரு பறவை ரொம்ப சோகமா இருக்கும். அதை பார்க்கும்போது என் மனசு ரொம்ப வலிக்கும்.

 

வாங்கிட்டுப் போன பறவைக்கு அவங்க நிறைய சாப்பாடு கொடுப்பாங்க, அன்பா பார்த்துக்குவாங்களே அப்படீண்ணு நினைத்து நான் மனத்தை தேத்திக்குவேன். எவ்வளவுதான் சாப்பாடு கொடுத்தாலும் சுதந்திரமா வானத்தில் பறக்க வேண்டிய பறவைகளை இப்படி கூண்டில் அடைத்து வைப்பது நல்லதில்லதான். ஆனா இந்த மனுஷங்க அதைதானே பண்றாங்க. என்ன செய்யறது?

 

அப்படித் தொடர்ந்து அந்தக் கடையையே பார்த்திட்டிருந்த போது நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சேன். கடையோட வலது பக்க மூலையில் இருக்கிற கூண்டில் இருக்கிற பறவை, ஒரு பச்சைக்கிளி ரொம்ப நாளா கடையிலேயே இருக்கு. அதை யாருமே வாங்கறதில்லை. அதுக்குப்பக்கத்திலிருக்கிற கூண்டு பல தடவை மாறிவிட்டது. குறைந்தது ஆறு பறவைகளாவது மாறியிருக்கும். ஆனா அந்த ஒரு கூண்டு மட்டும் நாலஞ்சு மாசமா அங்கேயே இருக்கும். அதை யாருமே வாங்கறதில்லை. நான் மேலும் ஒரு மாசம் அதையே கவனிச்சு வந்தேன். ம்ஹூம் யாருமே வாங்கிறதேயில்லை. பாவம் அந்தப் பறவை. அது தன்னைப் பத்தி என்ன நினைக்கும் ? ஏன் என்னை யாருமே வாங்கிட்டுப் போறதில்லைண்ணு நினைக்காதா?

 

ஒரு நாள் என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் நான் அதை வாங்கக் கூடாதுண்ணு தோனியது. நான் என் ஊண்டியலை எடுத்தேன். எனக்கு கிடைக்கிற பணத்தையெல்லாம் நான் இதில்தான் போட்டு வைப்பேன். இருக்கிற பணத்தை எண்ணிப்பார்த்தபோது இருநூறு ரூபாய் இருந்தது.

 

நான் பணத்தையும் எடுத்திட்டுக் கடைக்குப்போனேன். "கடைக்காரரே பச்சைக்கிளிகளுக்கு என்ன விலை அப்படீண்ணு கேட்டேன்.

இருநூறு ரூபாய் தம்பி அப்படீண்ணு உட்க்கார்ந்த இடத்திலிருந்து எந்திருக்காமலே பதில் சொன்னாரு.

 

இதோ இந்த வலதுபக்க மூலையில் இருக்கிற பச்சைக்கிளியைக் கொடுங்க. அப்படீண்ணு கேட்டேன். அவரு "இந்தப் பறவை வேண்டாம் தம்பி. வேறொண்ணு வாங்கிக்கோ?'' அப்படீண்ணாரு.

 

ஏன் அதுக்கு என்ன? அதோட ஒரு காலு ஊனம்.  எனக்கு அதுதான் வேணும். இதற்கு நீ நூறு ரூபாய் கொடுத்தாபோதும் கடைக்காரர் சொன்னார். இந்தாங்க இருநூறுபாயே வைத்து கொள்ளுங்கள். கால் ஊனம்ணு சொன்னாலும் பச்சைக் கிளி பச்சைக்கிளி தானே எனக்கு அந்தப் பறவைதான் வேண்டும். எடுத்துக்கு கொடுங்க அப்படீண்ணேன்.

 

கடைக்காரரோடு முகத்தில ஆச்சரியம்  தெரிந்தது. நூறு ரூபாய்க்குத் தர்றேன் சொன்னா வேண்டாம் இருநூரு ரூபாய் தர்றேன்

சொல்றானே இந்தப் பையன் என்று சொல்லிட்டு அவருக்கு ஆச்சரியம். அவர் பணத்தை வாங்கி பெட்டியில் போட்டுட்டு கூண்டு எடுத்துத்தர எந்திரிச்சாரர். கூண்டையும் எடுத்துத் தந்தார்.

 

நான் அந்தப் பச்சைக்கிளையைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாலே கூண்டுக்குள்ளே அப்படீயும் இப்படியும் நடந்தது. என்னை பார்த்து மகிழ்ச்சியாக கத்தியது. நான் ஒரு கையாலே கூண்டையும் பிடித்து கொண்டு மறுகையாலே என்னோட ஊன்று கோலையும் பிடிச்சு மெல்ல மெல்ல நொண்டிகிட்டே வீட்டுக்கு வந்தேன்.

 

கடைக்காரரு என்னையே பார்த்திட்டிருக்கிறதா எனக்குத் தோன்றியது.  

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
05-Jun-2020 17:22:55 Assssddfffh to the schedule said : Report Abuse
எனக்கு இது பிடிக்கவில்லை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.