LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எங்கள் ஆன்மா

செவேல் ! என்று நீளமாய்....

செல்லும் வண்டித்தடங்கள்,அதன்

இருபுறமும் கண்ணுக்கு குளிர்ச்சியாய்

பசேல் என்னும் வயல் வெளிகள்.

இடையிடையே கட்டமிட்ட வரப்புகள்,

அதன் நடுவே மனிதன்,

நடந்த ஓற்றை வடுக்கள்.

கூடையில் எதை எதையோ

வைத்து நடக்கும் ஒய்யார

மாதர்கள். நாற்றுக்களை தலையில்

சுமந்து செல்லும் ஆண்மக்கள்.

மக்கா ! கண்ணு ! ஆசையுடன்

விளிக்கும் அப்பச்சிமார்கள்,அய்யாமார்கள்

இவர்களுடன் இருக்கும் கொடுப்பினை

இல்லாமல் பிழைப்புக்காக வெளியூர்

சென்ற நான் ! இன்று

எனது ஊரை பார்க்க

வந்திருக்கிறேன்.!

சுற்றிலும் விதவிதமாய் கார்கள்.

விலையுயர்ந்த ஆடைகளுடன்,

சாரை சாரையாய் மக்கள்.

வயல் வெளிகளை காணவில்லை .!

வரப்புகள் வேலியாக்கப்பட்டிருந்தன .!

புதிது புதிதாய் கடைகள்,

விற்பனையாளர்களாய் விவசாய

உழைப்பாளிகள்,மக்கா,! பொழுதும்

உழைச்சும் என்னத்த பலனை

கண்டோம்? அதான் கடைய

போட்டு உட்கார்ந்துட்டோம். சாமியாரை

பார்க்க கூட்டம் வந்துகிட்டே

இருக்கே ! அவங்களுக்கு கடைய

போட்டா காசு குவியுதே

ஆன்மீகம் தேடி வரும்

கூட்டம் எங்கள் ஆன்மாவை

கொண்டு போய் விட்டதே !

My heart
by Dhamotharan.S   on 28 May 2016  0 Comments
Tags: ஆன்மா   எங்கள் ஆன்மா   Aanmaa   Aanmaa Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் ஆன்மா எங்கள் ஆன்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.