நடிகர் அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன், அருண்குமார், திரிஷா, அனுஷ்கா, விவேக் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியது.
அஜித் குமார் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்க பட்ட 'என்னை அறிந்தால்' படத்தின் இசை டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
என்னை அறிந்தால் பொங்கலை ஒட்டி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
|