LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    யோகா-தியானம் Print Friendly and PDF

தொப்பையை குறைக்கும் யோக முத்ரா ஆசனம் !!

யோக முத்ரா ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை என பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம் சரி செய்கின்றது.

காலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய சிலருக்கு நேரம் இருக்காது. இந்த நேரமில்லா நேரத்தில் நீங்கள் காலையில் எழுந்து வீட்டிற்குள்ளேயே ஒரு பத்து நிமிடம் இந்த யோக முத்ரா ஆசனத்தை செய்யலாம்.

யோக முத்ரா ஆசனம் செய்வதால் மன அழுத்தம் கூட நீங்கும். நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவதும் தடுக்கப்படும்.

செய்யும் முறை:

1. முதலில் பத்மாசனம் நிலையில் அமரவும்

2. பின்னர் கைகளை பின்னே மடித்து, வலது கை இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும் இப்படி 30 வினாடிகள் செய்யவும்.

4. பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.

பயன்கள்:

இந்த யோக முத்ரா ஆசனம் செய்யும் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும்.

சீராக செயல்படாமல் இருந்த குடல்கள் நன்கு செயல்பட்டு, அதனால் செரிமானம் நன்கு நடைபெற்று, கழிவுகள் குடலின் வழியே வெளியேறும்.

சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும்.
சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் குணமாகும்.

நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.

உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி நீங்கிவிடும்.

by Swathi   on 06 Mar 2016  2 Comments
Tags: யோக முத்ரா ஆசனம்   தொப்பை குறைய   யோக முத்ராசனம்   உடல் எடை குறைய   Yoga Mudra        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தொப்பையை குறைக்கும் யோக முத்ரா ஆசனம் !! தொப்பையை குறைக்கும் யோக முத்ரா ஆசனம் !!
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
கருத்துகள்
12-Sep-2018 22:48:55 பாஸ்கர் k said : Report Abuse
yoga படம் இருந்தால் நன்றாக இருக்கும்
 
30-Apr-2016 02:52:09 Kovindharaj said : Report Abuse
ponaikali vedhai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.