LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

சர்க்கரை நோய் உள்ளவரா நீங்கள்? - இதோ உங்களுக்கான உணவு முறை

சர்க்கரை நோய் என்பது இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள முக்கிய பிரச்சனை ஆகும். இந்தியாவில் நூற்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சர்க்கரை நோய் பரவ முக்கிய காரணம் உணவுப் பழக்கவழக்கம் தான் என்று தெரிகிறது. 70 வயதைக் கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏனெனில் அவர்களின் உணவுப்பழக்கம் சரியாக உள்ளதே காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட எபதைப் பார்க்கலாம்.


சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்,


01.கத்தரி பிஞ்சு, 

02.சுரைக்காய், 

03.முட்டைகோஸ், 

04.முள்ளங்கி, 

05.வெண்டைக்காய், 

06.கோவைக்காய்,

07.பீன்ஸ், 

08.சாம்பல் பூசணி, 

09.புடலங்காய், 

10.வாழைத்தண்டு, 

11.காளி பிளவர், 

12.வெண்பூசணி, 

13.பாகற்காய்,

14வாழைப்பூ, 

15.காராமணி, 

16.கொத்தவரங்காய், 

17.வெங்காயம், 

18.பீர்க்கங்காய், 

19.வாழை பிஞ்சு,

20.நூல்கோல், 

21.முருங்கைக் காய், 

22.வெள்ளரிக்காய், 

23.சௌசௌ,

24.கறிவேப்பிலை,

25.இஞ்சி, 

26.கொத்தமல்லி, 

27.புதினா 


மேற்கூறியவற்றை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.


நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் :


சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை,துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை,வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்:

சாத்துக்குடி              1

ஆரஞ்சு                  2

ஆப்பிள் (தோலுடன்)      1

கொய்யா (சிறியது)        2

பேரிக்காய் (சிறியது)      2

வெள்ளரிக்காய்           2

அன்னாசிப்பழம்          4 துண்டு

தர்பூசணி                1 துண்டு


இந்த பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.


எலுமிச்சை சாறு          200 மி.லி.

வாழைத்தண்டு சூப்        200 மி.லி.

அருகம்புல் சூப்            200 மி.லி.

நெல்லிக்காய் சாறு         100 மி.லி

கொத்தமல்லி சூப்          100 மி.லி.

கறிவேப்பிலை சூப்         100 மி.லி.

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.


அசைவ உணவுகள்:


முட்டை      1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன்          2 துண்டுகள்

கோழிக்கறி   100 கிராம் (அவித்தது)



தவிர்க்க வேண்டிய உணவுகள்:


வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.

இனிப்பு வகைகள்.

எண்ணையில் வறுத்த பொருட்கள்.

காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.

சர்க்கரை.

வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.

by Swathi   on 01 Sep 2012  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
16-Mar-2013 02:51:14 கணேசன்.ப. said : Report Abuse
நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்புகளை தந்துள்ளீர்கள். நன்றி. தங்கள் பனி தொடரவும் இன்னும் முன்னேற்றத்துக்கும் எனது வாழுத்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.