LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!

ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் தற்போது நடந்து வருகிறது.


இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய யுவராஜ் இந்த முறை பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 


கடந்த முறை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெயவர்த்தனேவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை. 


கடந்த 6 ஐ.பி.எல்., போட்டிகளிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடிய முரளி விஜய், தற்போது டில்லி அணியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக வலம் வந்த சேவாக்கை ரூ.3.2 கோடிக்கு பஞ்சாப் லெவன் அணி ஏலம் எடுத்துள்ளது.


தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரூ.12.50 கோடிக்கும், இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ரூ.9 கோடிக்கும், தென் ஆப்பிரிக்கா வீரர் டும்மினி ரூ.2.20 கோடிக்கும், இந்திய வீரர் திவாரி ரூ.2.80 கோடிக்கும், தென் ஆப்பிரிக்கா வீரர் க்யூ டீ காக் ரூ.3.50 கோடிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


தென் ஆப்பிரிக்கா வீரர் டூ ப்ளஸ்ஸியை ரூ.4.75 கோடிக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.


மேற்கிந்திய தீவு வீரர் டேரன் சமியை ரூ.3.50 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 


மேலும், தமிழக வீரர் முரளி விஜயை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்துள்ளது.


தென் ஆப்பிரிக்க வீரர் காலிசை ரூ.5.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்துள்ளது.


ஆஸ்திரேலியா வீரர்கள் மிட்சல் ஜான்சனை ரூ.6.50 கோடிக்கும், ஜார்ஜ் பெய்லியை ரூ.3.25 கோடிக்கும் பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.


ஆஸ்திரேலியா வீரர் வார்னரை ரூ.5.5 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லத்தை ரூ.3.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.


ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸியை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


ஆஸ்திரேலியா அணி வீரர் ஆரோன் பின்ஞ்ஜியை ரூ.4 கோடி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


இந்திய வீரர்கள் அமீத் மிஸ்ராவை ரூ.4.75 கோடிக்கும், புவனேஸ்வர்குமார் ரூ.4.25 கோடிக்கும், இஷாந்த் சர்மா ரூ.2.60 கோடிக்கும், இர்பான் பத்தான் ரூ.2.40 கோடிக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


ஆஸ்திரேலியா வீரர் மார்ஷ் ரூ.2.20 கோடிக்கும், இந்திய வீரர்கள் சஹா 2.20 கோடிக்கும், புஜாரா ரூ.1.90 கோடிக்கும் பஞ்சாப் லெவன் அணி ஏலம் எடுத்துள்ளது.


இந்திய வீரர்கள் உத்தப்பா ரூ.5 கோடிக்கும், யூசுப் பத்தான் ரூ.3.25 கோடிக்கும், வினைய்குமார் ரூ.2.80 கோடிக்கும், உதித் யாதவ் ரூ.2.60 கோடிக்கும், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ரூ.2.80 கோடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 

by Swathi   on 12 Feb 2014  0 Comments
Tags: IPL 7 Auction   7 th IPL   Yuvraj   IPL 7   7 வது ஐ.பி.எல்   ஐபிஎல் ஏலம்   ஐபிஎல் தொடர்  
 தொடர்புடையவை-Related Articles
7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !! 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.