LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International

 

எழுமின்- The Rise பேரியக்க குடையின் கீழ், CTACIS என அறியப்படும் தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தின் பெண் உறுப்பினர்களையும், The Rise- எழுமின் இயக்கத்தில் ஓராண்டு காலம் இணைந்து செயலாற்றிய பெண் உறுப்பினர்களையும் ‘அடிப்படை உறுப்பினர்களாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்துள்ள "நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals)” ஏற்று "அனைத்துலக தமிழ்ப் பெண்கள்"இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.

நூற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்ற இத் தொடக்க அவை 10 பிரகடன வரைவுகளை அறிவித்து ஏற்றுக் கொண்டது. அவையாவன:

1. படைப்பில் ஆண், பெண் எல்லோரும் சமம். 2050-ம் ஆண்டிற்குள் அரசியல், ஆட்சி நிர்வாகம், நீதி, திறன்சார் பணிகள்(Professionals), தொழில் முனைதல், ஆய்வு, கவின் கலைகள்- உலக நிர்வாகம்- இன்ன பிற துறைகள் அனைத்திலும் பெண்கள் சரி பாதி அளவு இருப்பதை உறுதி செய்வோம்.

2. ஒவ்வொரு பெண்ணையும் சிறு / குறு / பெரு தொழில்முனைபவராகவோ, வருவாய் ஈட்டும் வேலையில் ஈடுபடுபவராகவோ, பலர் இணைந்து கூட்டுறவுத் தொழில் செய்கிறவர்களாகவோ மாற்றுவதன் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்ப் பெண்கள் சமூகத்தை பொருளாதார தற்சார்பு கொண்டவர்களாக மாற்றி, குடும்ப வறுமையை முற்றாக ஒழிப்போம். இதற்காக "வீட்டுக்கு ஒரு பெண் தொழிலதிபர்" எனும் இலக்கு முழக்கத்தை முன்வைக்கிறோம்.

3. இயற்கை விவசாய மற்றும் இரசாயன நஞ்சற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்தும், அத்தகு பயன்பாட்டை சமூகத்தில் பலருக்கும் பழக்கப்படுத்தும் மகத்தான மாபெரும் உணவுச் சங்கிலியாக பெண்கள் நாங்கள் மாறி உணவுப் பாதுகாப்பு(Food Security), நல் விவசாய மறுமலர்ச்சி(Revival of Agrarian Economy), நல்வாழ்வுப் பாதுகாப்பு(Health Security), ஆகிய மூன்றையும் உறுதி செய்து 21-ம் நூற்றாண்டில் மனித குலத்தின் இயற்கைப் பேரருளாக நாங்கள் ஒளிவீசுவோம். படித்து வேலையின்றி இருக்கும் லட்சக்கணக்கான இளம் மாணவியரை "நிலம்சார் விவசாயம் மற்றும் பல்லுயிர் உறவு சார்" பொருளாதாரத்திற்கு இட்டுச்செல்ல முயற்சிகள் எடுப்போம்.

4. நல்ல கல்வி நம்மை விடுவிக்கும். தரமான கல்வி - குறிப்பாக உயர் கல்வி இன்று ஏழை - எளியோருக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. வறுமையினால் தரமான கல்வி, கிட்டவில்லை என்னும் நிலை எந்தப் பெண் மாணவிக்கும் இல்லை என்னும் நிலைக்காக நாங்கள் பாடுபடுவோம்.

5. ஆண்கள் எமக்கு பகை அல்ல. படைப்பில் சமமானவர்கள். அன்பிலும், நட்பிலும், பொது மானுடக் கடமைகளிலும் கூட்டாண்மையாளர்கள். குடும்பம் முதல் குவலய நிர்வாகம்வரை இணைந்து பயணிக்கும் கூட்டாண்மைப் பண்பாட்டினை வளர்த்தெடுக்கும் வழிகள் தேடுவோம்.

6. சில நிறுவனங்கள் / மற்றும் தனிநபர்களே இன்று உலகின், நாடுகளின் மூலதனங்களை கட்டுப்படுத்துகிறார்கள். பாரிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், இயற்கைச் சீர்குலைவுகளுக்கும், அரசியல் ஜனநாயகச் சீரழிவுக்கும் இது முக்கிய பின்புலக் காரணமாக இருக்கிறது. ஆதலால் மக்களே இணைந்து மூலதனத் திரட்சியை உருவாக்குவது மானுடத்தையும், இயற்கையினையும், வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வினையும் நேசிக்கும் எல்லோருடையவும் கடமையாகிறது. சவால் நிறைந்த இப் பெருங்கடமையினை அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் இயக்கம் ஏற்றெடுக்க முன்வருகிறது. நாங்கள் எழுப்பவிருக்கும் இணைந்து உருவாக்கப்படும் மூலதனம் மற்றும் தொழில்கள்- Co-created Capital and Enterprises, மனித குலத்திற்கு நம்பிக்கையூட்டும் பெரும் வியப்பாக உருவெடுக்குமென நம்பி உழைப்போம்.

7. பெண்களுக்கு எதிராக உடல் - மன ரீதியாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் மானுடத்திற்கெதிரான வன்முறையாகும். உலகில் ஒரு பெண்ணுக்கு நிகழும் வன்முறை எல்லோர் மீதும் நடத்தப்படும் வன்முறை எனக் கருதி பாதிக்கப்படும் பெண்களுக்கு எல்லா வழிகளிலும் துணை நிற்போம். தற்காப்புக் கலைகள் கற்றுத் தருவோம். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவோம். குடும்ப - சமூக வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் பாதுகாப்பாக சிறிது காலம் தங்குவதற்கான பொது இல்லங்கள், பொது சமையல் - உணவு நிலையங்கள் உருவாக்குவோம்.

8. அதி தீவிர தேசியவாதம், மத வெறி, சாதிப் பகை போன்றவை நவீன தொழில்நுட்ப காலத்தில் வளர்ந்து வருவது வியப்பும் அதிர்ச்சியும் தருகிறது. பகை, வெறுப்பு இரண்டையும் ஆன்மாவின் புற்று நோய்களாகவும் மனித நாகரீகத்திற்கே விடப்படும் நேரடிச் சவாலாகவும் அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் இயக்கம் கருதுகிறது. இதற்கெதிரான நெருப்புச் சுவராக உலகளாவிய பெண்கள் சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

9. உலக அமைதியும், இயற்கை அமைதியும், நீதியான வளர்ச்சியும் எங்கள் உயர்ந்த இலக்குகள். போர்கள், பிணக்குகள், வன்முறைகள் இன்றி அமைதி குடியிருக்கும் சமூகங்களில்தான் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் நிகழும். அதுபோலவே பருவநிலை மாற்றங்கள், கடல்மட்டம் உயர்தல் போன்றவற்றால் நிகழப்போகும் பேரிடர்களைத் தடுக்க எம்மாலான செயற்பாடுகளைச் செய்யாவிடில் எமது தலைமுறைகள் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் அறிந்திருக்கிறோம். மேலும் பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய நிகர உற்பத்தியல்ல - தேசிய குடும்ப உற்பத்தி மற்றும் தனிநபர் வருவாய் என்பதையும் புரிந்துள்ளோம். இப்புரிதல்களின் அடிப்படையில் உலக அமைதிக்காகவும், இயற்கைப் பாதுகாப்புக்காகவும், நீதியான பொருளாதார வளர்ச்சிக்காகவும் இணைந்து உழைக்க எம்மையே நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.

10. ஒவ்வொரு ஊரிலும் தாய்மொழி, கலைகள், இயற்கை, உணவு முறை- விவசாயம், யோகாசனம், அறிவுப் பயிற்சி, அற வாழ்வுப் பயிற்சி ஆகியவற்றை மாணாக்கருக்கும் இளையருக்கும் பள்ளிச் சூழலுக்கு அப்பால் கற்றுத் தரும் “தமிழாலயம்” நிறுவுதல். ஊர்கள்தோறும் “தமிழாலயம்” நிறுவுவதை எம் வரலாற்றுக் கடமையாக ஏற்றுச் செயல்படுத்துவோம்.

CTACIS அனைத்து கிளைகளின் தலைவர்கள்,The Rise Malaysia மற்றும் ஓமான் நாட்டு இயக்குனர்கள், மகளிர் கிறித்தவ கல்லூரி முதல்வர் Dr. Lilian Jasper, தமிழக பெண்கள் இயக்க நிறுவனர் வழக்கறிஞர் கனிமொழி மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பங்கேற்ற பெண்களின் ஆர்வமும் , தெளிவான பார்வைகளும், உறுதியும் மிகுந்த நம்பிக்கை தருவதாக இருந்தது.

by Swathi   on 12 Mar 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்
பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா
கல்விக்கோயில் விருது கல்விக்கோயில் விருது
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட  அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு
கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு  புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம் கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு  வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு.. கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..
நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு  வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.